திரையுலகில் வித்தியாசமான ஸ்கிரிப்ட்டுகளை தேர்ந்தெடுத்து நடிக்கும் நடிகர்களில் ஒருவர் விஷ்ணு விஷால். கடந்த ஆண்டு இவர் நடிப்பில் எந்த படமும் வெளியாகவில்லை என்று ஏக்கத்தில் இருந்த ரசிகர்களுக்கு காடன், எஃப்.ஐ.ஆர் போன்ற படங்களால் விருந்தளிக்கவுள்ளார் விஷ்ணு. எஃப்.ஐ.ஆர் படத்தின் எடிட்டிங் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக அப்படக்குழுவினர் தெரிவித்திருந்தனர்.

vishnuvishal

இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில், ரசிகர்களிடம் யோசனை கேட்டிருந்தார்.  அதில் என்னுடைய புதிய படத்தை ஏப்ரல் 11-ம் தேதியன்று தொடங்குவதாக இருந்தேன். ஆனால் வாழ்க்கை வேறு திட்டங்களை வைத்திருக்கிறது. அதே தினத்தில் நேர்மறை எண்ணத்துடன் சில தகவல்களை பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். ஆனால் அது உங்களது அனுமதி இருந்தால் மட்டுமே. 

Vishnuvishal

வித்தியாசமான முயற்சியாக டைட்டில் அறிவிப்பு டீஸரை வெளியிடவிருக்கிறோம். ஆனால் உங்களின் முடிவே இறுதியானது என்று ரசிகர்களிடம் கேட்டிருக்கிறார். அதற்கு பெரும்பாலான ரசிகர்கள் வெளியிடுங்கள் என பதிலளித்து வருகின்றனர்.