தமிழ் சினிமாவின் குறிப்பிடப்படும் கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் விஷ்ணு விஷால் அடுத்ததாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் லால் சலாம் திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். லைகா ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரிப்பில் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் இணைந்து முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் லால் சலாம் படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கௌரவ வேடத்தில் நடிக்கிறார்.

முன்னதாக பாரம்பரியமான கட்டா குஸ்தி எனும் குஸ்தி விளையாட்டை மையப்படுத்தி இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கத்தில், விஷ்ணு விஷால் நடிப்பில் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியான திரைப்படம் கட்டா குஸ்தி (தெலுங்கில் மட்டி குஸ்தி). விஷ்ணு விஷாலுடன் இணைந்து ஐஸ்வர்யா லெக்ஷ்மி கதாநாயகியாக நடிக்க, முனீஸ்காந்த், லிஸ்ஸி ஆண்டனி உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். 

தெலுங்கு நடிகர் ரவிதேஜாவின் RT டீம் வொர்க்ஸ் மற்றும் விஷ்ணு விஷாலின் விஷ்ணுவிஷால் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்க, ரிச்சர்ட்.M.நாதன் ஒளிப்பதிவில், கட்டா குஸ்தி திரைப்படத்திற்கு ஜஸ்டீன் பிரபாகரன் இசையமைக்கிறார். ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட கட்டா குஸ்தி திரைப்படம் கடந்த டிசம்பர் 2ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகி ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டாகியுள்ளது. 

இந்நிலையில் கடந்த நான்கு ஆண்டுகளில் தனது கடின உழைப்பின் பயனாக தான் அடைந்திருக்கும் முன்னேற்றம் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், 4 ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் எனது படமான சிலுக்குவார்பட்டி சிங்கம் 6 படங்களோடு ரிலீஸ் ஆனது. எனக்கு வெறும் 120 திரையரங்குகளே கிடைத்தது. 4 ஆண்டுகளுக்கு பிறகு அதே இயக்குனருடன் கட்டாகுஸ்தி தற்போது அதே நாளில் மூன்றாவது வாரத்தில் வெற்றிகரமாக 172 திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது... என பதிவிட்டுள்ளார். நடிகர் விஷ்ணு விஷாலின் அந்த பதிவு இதோ…
 

4 years ago today my movie SILUKKUVARPATTISINGAM was cornered to release with 6 other movies …i got just 120 theatres..

4 years later with same director GATTA KUSTHI is running in 172 theatres in 3rd week on the same very day …

DONT GIVE UP :)

DONT STOP BELIEVEING :) pic.twitter.com/eelQ6fRHew

— VISHNU VISHAL (VV) (@TheVishnuVishal) December 21, 2022