தமிழ் சினிமாவில் ஜாலியான படைப்புகள் மூலம் ரசிகர்களை ஈர்த்தவர் இயக்குனர் வெங்கட் பிரபு. கிரிக்கெட் பிரியர்களுக்கு சென்னை 28, காமெடி திரில்லர் விரும்பிகளுக்கு சரோஜா, பேச்சுளர்களின் கனவு லோகத்திற்கு கோவா, தல படமா மங்காத்தா, ருசி பார்க்க பிரியாணி, திகில் கலந்து மாஸ் காட்ட மாசு என்கிற மாசிலாமணி என பல ஜானரில் பட்டையை கிளப்பும் சினிமா சைன்டிஸ்ட். இன்னும் ரசிகர்களுக்கு பார்ட்டி மட்டும் தான் வைக்கவில்லை. அதற்கு பதிலாக மாநாடு நடத்தி வருகிறார். 

chennai28

இவர் இயக்கத்தில் கடந்த 2007-ம் ஆண்டு வெளியான சென்னை 28 திரைப்படம் இன்று வரை ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இன்றோடு இத்திரைப்படம் வெளியாகி 13 வருடங்கள் ஆகியுள்ளதால் ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். 

Vishnu

இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் ட்விட்டரில் பதிவு ஒன்றை செய்துள்ளார். அதில் நம்பமுடியவில்லை சார். சென்னை 28 திரைப்பட வாய்ப்பிற்காக உங்களை சந்தித்து 14 வருடம் ஆகிறது. நேரம் பறக்கிறது.. எப்போதும் ரசிகர்கள் விரும்பும் படமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.