தமிழ் திரை உலகில் அதிரடி ஆக்சன் கதாநாயகர்களில் ஒருவராகவும் தயாரிப்பாளராகவும் வலம் வரும் நடிகர் விஷால் அடுத்ததாக ராணா புரோடக்சன் சார்பில் நடிகர்கள் ராணா மற்றும் நந்தா இணைந்து தயாரிக்க இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் “லத்தி சார்ஜ்" படத்தில் காவல் துறை அதிகாரியாக நடித்து வருகிறார்.

தொடர்ந்து இயக்குனர் து.பா.சரவணன் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையில், நடிகர் விஷால் கதாநாயகனாக நடித்திருக்கும் வீரமே வாகை சூடும் திரைப்படம் அடுத்து வெளிவரவுள்ளது. சமீபத்தில் வீரமே வாகை சூடும் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. 

முன்னதாக நடிகர்கள் விஷால் மற்றும் ஆர்யா நேருக்கு நேர் மோதும் அதிரடி ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியிருக்கும் எனிமி படத்தை இயக்குனர் ஆனந்த் ஷங்கர் எழுதி இயக்கியுள்ளார். எனிமி திரைப்படம் நாளை (நவம்பர் 4) சூப்பர் ஸ்டாரின் அண்ணாத்த படத்துடன் இணைந்து உலகமெங்கும் தீபாவளி ரிலீசாக வெளியாகிறது.

இந்நிலையில் எனிமி திரைப்படத்தின் ரிலீசுக்கு முன்பாக நடிகர் விஷால் திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு சுவாமி தரிசனம் செய்ய சென்றுள்ளார். திருப்பதியில் தரிசனத்திற்காக சென்ற நடிகர் விஷாலின் புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளன. அந்த புகைப்படங்கள் இதோ...