செல்லமே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் விஷால்.தொடர்ந்து இவர் நடித்த சண்டக்கோழி,திமிரு,தாமிரபரணி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.ஆக்ஷன் கலந்த குடும்ப படங்களான இவை ரசிகர்களிடமும்,விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை அடுத்து தமிழகம் முழுவதும் பிரபலமான நட்சத்திரமாக விஷால் வளர்ந்தார்.

இதனை தொடர்ந்து இவர் நடித்த பல ஹிட் படங்களில் நடித்து அசத்தினார்.இவரது நடிப்பில் உருவான சக்ரா படம் கடைசியாக வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் எனிமி,து பா சரவணன் இயக்கத்தில் வீரமே வாகை சூடும் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் விஷால்.எனிமி திரைப்படம் ஆயுத பூஜையை முன்னிட்டு ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

வீரமே வாகை சூடும் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.விஷால் பிலிம் பேக்டரி இந்த படத்தினை தயாரித்துள்ளனர்.டிம்பிள் ஹயாட்டி இந்த படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.யோகி பாபு,ரவீனா ரவி,பாரதி கண்ணம்மா புகழ் அகிலன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து விஷால் ஒரு வீடீயோவை பகிர்ந்துள்ளார்.இந்த வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்