செல்லமே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் விஷால்.தொடர்ந்து இவர் நடித்த சண்டக்கோழி,திமிரு,தாமிரபரணி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.ஆக்ஷன் கலந்த குடும்ப படங்களான இவை ரசிகர்களிடமும்,விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை அடுத்து தமிழகம் முழுவதும் பிரபலமான நட்சத்திரமாக விஷால் வளர்ந்தார்.

இதனை தொடர்ந்து இவர் நடித்த பல ஹிட் படங்களில் நடித்து அசத்தினார்.இவரது நடிப்பில் உருவான எனிமி,வீரமே வாகை சூடும் படங்கள் வெளியாகி சுமாரான வரவேற்பை பெற்றிருந்தன.இதனை தொடர்ந்து லத்தி,மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் விஷால்.

லத்தி படத்தினை ராணா புரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ரமணா மற்றும் நந்தா இணைந்து தயாரித்துள்ளனர்.வினோத் குமார் இந்த படத்தினை இயக்கியுள்ளார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.சுனைனா இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

இந்த படம் 5 மொழிகளில் வெளியாகவுள்ளது.இந்த படத்தின் இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.தற்போது இந்த படத்தின் கடைசி சண்டைக்காட்சி படமாக்கப்பட்டு வருகிறது என்ற அப்டேட்டை விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.மொத்த படப்பிடிப்பும் விரைவில் நிறைவடையும் என்று தெரிகிறது.