தமிழ் திரை உலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் விஷால் தற்போது இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார் முன்னதாக இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளிவந்து சூப்பர் ஹிட்டான துப்பரிவாளன் திரைப்படத்தின் 2-ம் பாகமாக தயாராகும் துப்பறிவாளன் 2 திரைப்படத்தை இயக்கி நடிக்கவுள்ளார் விஷால்.

துப்பறிவாளன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் லண்டனில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் விஷால் கதாநாயகனாக நடித்து வருகிறார். மேலும் S.J.சூர்யா முக்கிய வேடத்தில் நடிக்கிறார். சில வாரங்களுக்கு முன்பு மார்க் ஆண்டனி திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது. 

இந்த வரிசையில் இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் மீண்டும் காவல்துறை அதிகாரியாக விஷால் நடித்து வரும் திரைப்படம் லத்தி. சுனைனா கதாநாயகியாக நடிக்க,இளைய திலகம் பிரபு லத்தி திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்யும் லத்தி படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளிவர உள்ள லத்தி திரைப்படத்தை ராணா புரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ராணா மற்றும் நந்தா இணைந்து தயாரிக்கின்றனர். முன்னதாக லத்தி திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 12-ம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில் தற்போது லத்தி படத்தின் ரிலீஸ் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இது குறித்து நடிகர் விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் லத்தி திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் ரிலீஸாகும் என அறிவித்து பதிவிட்டுள்ளார். நடிகர் விஷாலின் அந்த அறிவிப்பு பதிவு இதோ…
 

#Laththi coming soon world wide in theatres near you !#Laatti #LaththiCharge@RanaProduction0 @thisisysr @TheSunainaa @dir_vinothkumar pic.twitter.com/zUISSIK60E

— Vishal (@VishalKOfficial) July 12, 2022