தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவராக வலம் வரும் நடிகர் விஷால் தற்போது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். விஷாலுடன் இணைந்து மிரட்டலான கதாபாத்திரத்தில் SJ.சூர்யா நடிக்கும் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கப்பட்டு முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.

முன்னதாக இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் மீண்டும் காவல்துறை அதிகாரியாக விஷால் நடித்துள்ள லத்தி திரைப்படத்தின் இறுதிகட்ட பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. மேலும் இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ள விஷால் துப்பரிவாளன் 2 திரைப்படத்தை இயக்கி நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே நடிகர் விஷால் ஆந்திரா அரசியலில் களமிறங்க உள்ளதாகவும், ஆந்திராவின் குப்பம் தொகுதியில் திரு.சந்திரபாபு நாயுடு அவர்களை எதிர்த்து போட்டியிடுவதாகவும் சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவின. இந்நிலையில் தனது அரசியல் என்ட்ரி குறித்து பரவிவரும் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் விஷால் தற்போது அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில், “நான் அரசியலில் களமிறங்குவதாகவும் ஆந்திரப் பிரதேசத்தில் குப்பம் தொகுதியில் போட்டியிட உள்ளதாகவும் பல வதந்திகளை கேட்டு வருகிறேன்.. இதை முற்றிலுமாக நான் மறுக்கிறேன்! இது பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இது குறித்து இதுவரை என்னை யாரும் சந்தித்தது இல்லை. இந்த செய்தி எங்கிருந்து கிளம்பியது என்றே தெரியவில்லை. அடுத்தடுத்த திரைப்படங்கள் குறித்து மட்டுமே நான் பயணிக்கிறேன். ஆந்திர பிரதேசத்தின் அரசியலில் களமிறங்குவது குறித்தோ, திரு.சந்திரபாபு நாயுடு அவர்களுக்கு எதிராக போட்டியிடுவது குறித்தோ எனக்கு எந்த எண்ணமும் கிடையாது!!" என விஷால் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். விஷாலின் அந்த அறிக்கை இதோ…


 

🖊 pic.twitter.com/vt7fQM2PD9

— Vishal (@VishalKOfficial) July 1, 2022