செல்லமே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் விஷால்.தொடர்ந்து இவர் நடித்த சண்டக்கோழி,திமிரு,தாமிரபரணி உள்ளிட்ட படங்களில் நடித்தார்.ஆக்ஷன் கலந்த குடும்ப படங்களான இவை ரசிகர்களிடமும்,விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை அடுத்து தமிழகம் முழுவதும் பிரபலமான நட்சத்திரமாக விஷால் வளர்ந்தார்.

இதனை தொடர்ந்து இவர் நடித்த பல ஹிட் படங்களில் நடித்து அசத்தினார்.இவரது நடிப்பில் உருவான எனிமி படம் கடைசியாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை தொடர்ந்து து பா சரவணன் இயக்கத்தில் இவர் நடித்துள்ள வீரமே வாகை சூடும் படம் வரும் ஜனவரி 26ஆம் தேதி வெளியாகவுள்ளது.இதனை தொடர்ந்து துப்பறிவாளன் 2,லத்தி,ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒரு படம் பிஸியாக நடித்து வருகிறார்.

எனிமி பட தயாரிப்பாளர் வினோத் மினி ஸ்டுடியோஸ் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் படத்தினை தயாரிக்கிறார்.எஸ் ஜே சூர்யா இந்த படத்தில் வில்லன் வேடத்தில் நடிக்கிறார்.இந்த படம் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி,மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது.

இந்த படத்தின் டைட்டில் லுக் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.இந்த படத்திற்கு மார்க் ஆன்டனி என்று பெயரிட்டுள்ளனர்.இந்த படத்தின் வித்தியாசமான டைட்டில் லுக் போஸ்டர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த போஸ்ட்டரை கீழே உள்ள லிங்கில் காணலாம்