ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது. எனிமி எனத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் பிரகாஷ்ராஜ், மிருணாளினி, கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

ஹைதராபாத்தில் முதற்கட்டப் படப்பிடிப்பை முடித்துவிட்டு, சென்னையில் சில காட்சிகளைப் படமாக்கினர். இந்தப் படத்தில் விஷாலுக்கு நாயகியாக மிருணாளினி நடித்து வருகிறார். சமீபத்தில் படத்தில் நடிகை மம்தா மோகன்தாஸ் ஒப்பந்தமாகினார். ஆர்யாவுக்கு ஜோடியாக இவர் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. 

எனிமி படத்தை மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் வினோத் தயாரித்து வருகிறார். இசையமைப்பாளராக தமன், ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர், கலை இயக்குநராக டி.ராமலிங்கம் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். விரைவில் சில முக்கிய காட்சிகளைப் படமாக்க வெளிநாட்டுக்குப் பயணிக்கவுள்ளது படக்குழு.

கடைசியாக ஆர்யாவின் லுக் கொண்ட போஸ்டர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. சாங்கி சிறையில் இருக்கும் கைதியாக அதில் காட்சியளித்தார் ஆர்யா. 

கடந்த சில நாட்களாக இப்படத்தின் படப்பிடிப்பை துபாயில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 50 அடி உயரத்தில் உள்ள ஒரு கட்டிடத்தின் மேல் விஷால் அட்டகாசமாக நிற்பது போன்ற ஒரு புதிய ஸ்டில்லை எனிமி படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.