எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நாயகனாக நடிக்கும் படம் சக்ரா. இப்படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் காவல்துறை அதிகாரியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் ரெஜினா கசண்ட்ரே நடிக்கிறார். விஷால் பிலிம் பேக்டரி இந்த படத்தை தயாரிக்கிறது. தற்போது சக்ரா படத்தின் ட்ரைலர் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது. ட்ரைலர் காட்சிகளை பார்க்கையில் டிஜிட்டல் உலகில் நடக்கும் திருட்டு குறித்த கதை போல் தெரிகிறது. கண்ணுக்கு தெரியாத வைரஸ் மட்டுமில்ல, வைர் லெஸ்ஸும் ஆபத்துதான் எனும் வசனம் அம்சமாக உள்ளது. 

ரோபோ ஷங்கர், கே.ஆர்.விஜயா, ஸ்ருஷ்டி டாங்கே, மனோபாலா, விஜய்பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சமீர் முகமது படத்தொகுப்பு செய்கிறார். ஆன்லைன் வர்த்தக மோசடிகள் பற்றிய பின்னணியுள்ள கதையாக உருவாகி வருகிறது இந்த படம். படத்தின் ஷூட்டிங் முழுவதும் சென்னை மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளில் நடத்தப்பட்டது. 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னட என நான்கு மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. விரைவில் இதன் ரிலீஸ் தேதி தெரியவரும். இதனால் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர் விஷால் ரசிகர்கள். இந்த படத்தை தொடர்ந்து துப்பறிவாளன் 2 படத்தை இயக்கவுள்ளார் விஷால். கொரோனா காரணமாக அறிவிக்கப்பட்ட இந்த ஊரடங்கு முழுமையாக முடிந்தவுடன் சக்ரா படத்தின் ரிலீஸ் தேதியை எதிர்பார்க்கலாம். தற்போது யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவான ட்ரைலரின் ஒரிஜினல் சவுண்ட் ட்ராக் வெளியானது. 

கடந்த மாதம் புரட்சி தளபதி விஷால் மற்றும் அவருடைய தந்தை GK ரெட்டிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. அதன் பிறகு ஆயுர்வேத மருந்துகள் எடுத்துக்கொண்டு முழுமையாகக் குணமடைந்துவிட்டதாக விஷாலே தனது வீடியோ பதிவின் வாயிலாக தெரிவித்தார். தற்போது சீரான உடல்நிலையுடன் இருக்கும் விஷால், ஆர்யாவோடு பாக்ஸிங் செய்து, ஜிம்மில் இருக்கும் புகைப்படங்கள் சில நாட்கள் முன்பு வெளியானது குறிப்பிடத்தக்கது.