எம்.எஸ்.ஆனந்தன் இயக்கத்தில் விஷால் நாயகனாக நடிக்கும் படம் சக்ரா. விஷால் ஜோடியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடித்துள்ளார். முக்கிய வேடத்தில் ரெஜினா கசண்ட்ரா நடித்துள்ளார். விஷால் பிலிம் பேக்டரி இந்த படத்தை தயாரிக்கிறது. படத்தின் ப்ரீவியூ காட்சிகள் சமீபத்தில் அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. படத்தை பார்த்தவர்கள் சிறந்த விமர்சனத்தை தந்தனர். 

யுவன் ஷங்கர் இசையில் படத்தின் முதல் சிங்கிளான ஹர்லா ஃபர்லா பாடலின் லிரிக் வீடியோ சமீபத்தில் வெளியானது. யுவன் இசையில் விஷால் நடிக்கும் சக்ரா பத்தாவது படமாகும். இந்த காம்போவிற்கென தனி ரசிகர்கள் உண்டு. யுவன் ஷங்கர் ராஜா மற்றும் சன்ஜனா கல்மஞ்சி பாடிய இந்த பாடல் பிலே லிஸ்ட்டை ரூல் செய்து வருகிறது. 

இந்நிலையில் படத்தின் இசை உருவான விதம் குறித்த வீடியோவை பகிர்ந்துள்ளார் விஷால். இந்த வீடியோ இணையத்தில் ட்ரெண்டாகி வருகிறது. விரைவில் படத்தின் மீதம் உள்ள பாடல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ரோபோ ஷங்கர், கே.ஆர்.விஜயா, ஸ்ருஷ்டி டாங்கே, மனோபாலா, விஜய்பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். சக்ரா படத்தின் ட்ரைலர் காட்சிகளை பார்க்கையில் டிஜிட்டல் உலகில் நடக்கும் திருட்டு குறித்த கதை போல் தெரிகிறது. கண்ணுக்கு தெரியாத வைரஸ் மட்டுமில்ல, வைர் லெஸ்ஸும் ஆபத்துதான் என்று விஷால் பேசிய வசனம் ரசிகர்களை கவர்ந்தது. 

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது. ஆன்லைன் வர்த்தக மோசடிகள் பற்றிய பின்னணியுள்ள கதையாக உருவாகியுள்ள சக்ரா படத்திற்கு பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு சமீர் முகமது படத்தொகுப்பு செய்கிறார்.  படத்தின் படப்பிடிப்பு முழுவதும் சென்னை மற்றும் கோயம்புத்தூர் பகுதிகளில் நடத்தப்பட்டது. 

இந்த படத்தை தொடர்ந்து ஆனந்த் ஷங்கர் இயக்கி வரும் எனிமி படத்தில் நடித்து வருகிறார் விஷால். ஒன்பது வருடங்களுக்கு பிறகு விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கின்றனர். வினோத் தயாரிக்கும் இந்த படத்தின் அறிவிப்பு நாளை வெளியாகிறது. இதைத் தொடர்ந்து துப்பறிவாளன் 2 திரைப்படத்தை இயக்கி நடிக்கவுள்ளார்.