தமிழ் சினிமாவில் தொடர்ந்து அதிரடி ஆக்ஷன் படங்களில் நடித்து வரும் நடிகர் விஷால் அடுத்ததாக மீண்டும் ஆக்ஷன் த்ரில்லர் படமாக இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் தயாராகும் மார்க் ஆண்டனி திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார். இப்படத்தில் SJ சூர்யா முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

இதனையடுத்து இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ள நடிகர் விஷால் துப்பறிவாளன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பை வருகிற ஏப்ரல் மாதம் லண்டனில் துவங்கவுள்ளார். முன்னதாக மீண்டும் காவல்துறை அதிகாரியாக தற்போது லத்தி படத்தில் விஷால் நடித்து வருகிறார்.  லத்தி திரைப்படத்தை ராணா புரொடக்ஷன்ஸ் சார்பில் நடிகர்கள் ராணா மற்றும் நந்தா இணைந்து தயாரிக்கின்றனர்.

இயக்குனர் வினோத் குமார் இயக்கத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட 5 மொழிகளில் வெளிவர உள்ள லத்தி படத்தில் சுனைனா கதாநாயகியாக நடிக்க, நடிகர் பிரபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பாலசுப்பிரமணியம் ஒளிப்பதிவில் சாம்.சி.எஸ் இசையமைக்கும் லத்தி படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. 

சில வாரங்களுக்கு முன்னணி ஸ்டன்ட் இயக்குனர் பீட்டர் ஹெய்ன் ஸ்டன்ட் இயக்கத்தில் அதிரடி சண்டைக் காட்சிகளின் படப்பிடிப்பின் போது நடிகர் விஷால் ரிஸ்க்கான ஸ்டன்ட் செய்ததில் காயமடைந்தார். இதனையடுத்து அதற்கான சிகிச்சைக்காக கேரளா சென்ற விஷால் கேரளாவின் பெருங்கோடு பகுதியில் உள்ள குரு கிருபா ஆயுர்வேத சிகிச்சையில் மையத்தில் சிகிச்சை மேற்கொண்டார். 

இந்நிலையில் தற்போது சிகிச்சை முடிந்து மீண்டும் இன்று (மார்ச் 9) லத்தி படப்பிடிப்பில் களமிறங்கியுள்ளார் விஷால்.  மீண்டும் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் நிறைந்த ஷூட்டிங்கில் விஷால் கலந்துகொண்ட வீடியோ தற்போது வெளியானது. வைரலாகும் அந்த வீடியோ இதோ…