விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கும் படத்தின் டைட்டில் வெளியானது !
By Sakthi Priyan | Galatta | November 25, 2020 17:05 PM IST
ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தில் விஷால் மற்றும் ஆர்யா இணைந்து நடிக்கின்றனர். விஷால் 30 மற்றும் ஆர்யா 32 ஆன இந்த படத்தில் விஷாலுக்கு வில்லனாக நடிக்க ஆர்யாவும் சம்மதம் தெரிவிக்கவே, படத்தின் பணிகள் தொடங்கப்பட்டன. அக்டோபர் 16-ம் தேதி ஹைதராபாத்தில் படப்பூஜையுடன் கூடிய படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.
மினி ஸ்டுடியோஸ் நிறுவனம் சார்பில் எஸ்.வினோத்குமார் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். தமிழில் லென்ஸ், வெள்ளை யானை மற்றும் திட்டம் இரண்டு ஆகிய படங்களைத் தொடர்ந்து அந்நிறுவனம் தயாரிக்கும் 4-வது தமிழ்ப் படம் இதுவாகும்.இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக ஆர்.டி.ராஜசேகர் பணிபுரிந்து வருகிறார். தமன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.
இப்படத்தின் படப்பிடிப்பில் கடந்த மாதம் இணைந்தார் புரட்சி தளபதி விஷால். விஷால் கலந்து கொண்ட வீடியோவை வெளியிட்டது படக்குழு. முறையான பாதுகாப்புடன் படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர் படக்குழுவினர். படத்தின் ஓப்பனிங் சாங் காட்சிகளை சமீபத்தில் படமாக்கினர் படக்குழுவினர். ராமோஜி பிலிம் சிட்டியில் லிட்டில் இந்தியா செட் வடிவமைக்கப்பட்டு, பிருந்தா மாஸ்டர் கோரியோகிராஃபியில் பாடல் காட்சி படமாக்கப்பட்டது. சமீபத்தில் நடிகை மிருணாளினி ரவி படத்தில் இணைந்ததாக அறிவிப்பு வெளியானது.
படத்தின் முதற் கட்ட படப்பிடிப்பு ஹைதராபாத்தில் முடிவடைந்தது. இதுகுறித்து விஷால் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த படப்பிடிப்பில் நடிகர் கருணாகரன், மிருணாளினி ரவி, பேபி மானஸ்வி ஆகியோர் நடித்துள்ளனர். இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் நடிகர் ஆர்யா கலந்த கொள்ளலாம் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டர் தற்போது வெளியானது. ENEMY என தலைப்பிடப்பட்ட இந்த படத்தின் போஸ்டர் விஷால் மற்றும் ஆர்யா ரசிகர்களை ஈர்த்து வருகிறது. இந்த டைட்டில் லுக் போஸ்டரை ட்ரெண்ட் செய்து வருகின்றனர் ரசிகர்கள். படத்தில் ஆர்யா வில்லன் என செய்திகள் வெளியானது. தற்போது வெளியாகியிருக்கும் போஸ்டர் இதை உறுதிபடுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.
விஷால் நடிப்பில் ரிலீஸுக்கு தயாராக இருக்கும் படம் சக்ரா. சக்ரா படத்தை எம்.எஸ்.ஆனந்தன் இயக்கியுள்ளார். இதன் பிறகு துப்பறிவாளன் 2 திரைப்பட பணிகளில் விஷால் கவனம் செலுத்த உள்ளார். ஆர்யா கைவசம் பா.ரஞ்சித் இயக்கும் திரைப்படம், சுந்தர்.சி-யின் அரண்மனை 3 போன்ற படங்கள் உள்ளது. ஆர்யா நடிப்பில் உருவான டெடி திரைப்படம் ரிலீஸுக்கு தயாராக உள்ளது.
#ENEMY 🎥🙏🏽 pic.twitter.com/ggmyZ5Lnbm
— Anand Shankar (@anandshank) November 25, 2020
Ramya Pandian locks Jithan Ramesh - Semma exciting Bigg Boss 4 promo
25/11/2020 03:19 PM
Thalapathy Vijay's Master album's new huge milestone after Mersal and Bigil
25/11/2020 01:32 PM