'என் கட்ட வேகறதுக்குள்ள "சில்க் ஸ்மிதா"வ பார்க்கணும்னு ஆசை!'- மார்க் ஆண்டனி வெற்றி விழாவை கலகலப்பாகிய விஷால்! வைரல் வீடியோ

மார்க் ஆண்டனி வெற்றி விழாவில் சில்க் ஸ்மிதா பற்றி பேசிய விஷால்,Vishal about silk smitha and sj suryah in mark antony success meet | Galatta

இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் மற்றும் எஸ்.ஜே.சூர்யா இணைந்து நடித்திருக்கும் மார்க் ஆண்டனி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று ப்ளாக் பஸ்டர் ஹிட் ஆகியிருக்கிறது. இந்த நிலையில் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் வெற்றி விழா தற்போது நடைபெற்றது. இந்த விழாவில் நடிப்பு அரக்கன் எஸ்.ஜே.சூர்யா அவர்கள் குறித்தும் சில்க் ஸ்மிதா கதாபாத்திரம் குறித்தும் நடிகர் விஷால் சுவாரசியமாக பேசினார். அப்படி பேசுகையில், 

“நான் பார்த்திருக்கிறேன் எஸ்.ஜே.சூர்யா சாரை 25 ஆண்டுகளாக... லயோலா கல்லூரியில் துருதுருவென போய்க் கொண்டே இருப்பார். 2300 மாணவர்களை பெயரோடு தெரியும் ஏனென்றால் அது தேர்தல் நேரம். யார் இவர் இவரிடம் மட்டும் நாம் இன்னும் ஓட்டு கேட்கவில்லையே.. யார் இவர் அங்கும் இங்கும் சுத்திக் கொண்டிருக்கிறார். எனது விசாரித்த போது இவர் தான் எஸ்.ஜே.சூர்யா சினிமாவில் இருக்கிறார் என்று சொன்னார்கள். அதே எஸ்.ஜே.சூர்யா அவர்களை வெவ்வேறு காலகட்டத்தில் பார்க்கும்போதும் ஒரே படத்தில் மிகவும் அருகில் பார்த்து இணைந்து நடிக்கும் போதும் அதே குறிக்கோளோடு இருக்கிறார். இப்போது பேசிய போது சொன்னார் அல்லவா... அந்த பேச்சை அவர் தூங்கும் போது நீங்கள் எழுப்பி கேட்டாலும் அப்படியே சொல்வார். அவருடைய நோக்கம் அதுதான். அதுதான் எனக்கு அவரிடம் மிகவும் பிடித்தது. எஸ்.ஜே.சூர்யா சாருடன் இணைந்து நடித்த அனுபவம் என்றால் ஒரு நடிகராக அவரோடு மிகவும் உற்சாகமாக என்ஜாய் பண்ணி நடித்தேன். நிறைய விஷயங்கள் அவரைப் பற்றி கேள்விப்பட்டு அவருடன் பணியாற்றியது டீஸ்ட்ரெஸ்சிங்காக இல்லாமல் இருந்தது. ஒரு நடிகனாக இத்தனை வருடமாக நடிக்கிறோம் ஒரு வசனத்தை இப்படி பேசலாம் என நினைப்போம். இல்லை இப்படி கூட பேசலாம் என இன்னொரு பரிமாணத்தை கற்றுக் கொண்டது அவரைப் பார்த்து தான் கற்றுக் கொண்டேன். எனக்கு ஆசிரியர் இல்லை புத்தகமில்லை எல்லாமே நன்றாக பார்த்து கற்றுக்கொண்டேன். கொஞ்சம் கொஞ்சமாக கேமராவில் அவரை மெய்மறந்து பார்த்து ரசித்துக்கொண்டிருந்தேன். எஸ்.ஜே.சூர்யா சார் பின்னி பெடல் எடுத்திருக்கிறார். 

எனக்கு என் கட்டை வேகிறதுக்குள்ள எப்படியாவது சில்க் ஸ்மிதாவை பார்த்து விட வேண்டும் என்ற ஒரு ஆசை. பாதியை நடிகை விஷ்ணு பிரியா பூர்த்தி செய்தார்கள். மீதியை இங்க இருக்கும் பிரசாத் VFX தான் பூர்த்தி செய்தார்கள். ரொம்ப நன்றி ரெண்டு பேருக்கும். அந்த சில்க் ஸ்மிதா சீனில் எனக்கு மிகவும் பிடித்த வசனம் என்னவென்றால் இந்த சிலுக்குக்கு நீங்கள் ஹெல்ப் பண்ணுவீங்களா? எனக் கேட்கும் போது, மிகவும் உணர்வுபூர்வமாக ஆதிக் ரவிச்சந்திரன் எழுதியிருப்பார். “இது வக்கீல் செல்வம் சொன்னதற்காகவோ நீங்கள் சில்க் என்பதற்காகவோ இல்லை இந்த ஆண்களின் ஆதிக்கம் நிறைந்த சினிமா உலகத்தில் ஒரு பெண்ணாக கஷ்டப்பட்டு முன்னேறி வந்த ஒரு விஜயலட்சுமிக்காக நான் இங்கு வந்திருக்கிறேன்.” என்ற வசனத்திற்கு இங்கே நீங்கள் அடித்த கைத்தட்டல் மாதிரி தியேட்டரில் 10 மடங்கு இருந்தது.” 

என பேசி இருக்கிறார். இன்னும் பல முக்கிய விஷயங்களை மார்க் ஆண்டனி வெற்றி விழாவில் பகிர்ந்து கொண்ட நடிகர் விஷாலின் அந்த முழு வீடியோ இதோ…