கதைதேர்வில் எப்போதும் வித்தியாசம் காட்டும் நடிகர்களில் ஒருவர் கார்த்தி.கொம்பன் பட இயக்குனர் முத்தையா இயக்கத்தில் இவர் நடித்துள்ள விருமன் படம் இன்று பிரம்மாண்டமாக திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இதனை தொடர்ந்து இவர் மணி ரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்து முடித்துள்ளார்.இந்த படம் செப்டம்பர் 30ஆம் தேதி வெளியாகவுள்ளது.சர்தார் படத்தின் ஷூட்டிங்கில் விறுவிறுப்பாக கலந்துகொண்டு வருகிறார் கார்த்தி.இந்த படம் தீபாவளிக்கு ரிலீசாகவுள்ளது.

விருமன் படத்தினை 2D எண்டெர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளனர்.இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் இந்த படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகிறார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார்.கொம்பன் படத்தினை அடுத்து இயக்குனர் முத்தையாவுடன் இணைந்துள்ளார் கார்த்தி.

இந்த படம் வரும் ஆகஸ்ட் 12ஆம் தேதி இன்று பல இடங்களில் சிறப்பு காட்சிகளோடு பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகியுள்ளது.கார்த்தி,அதிதி ஷங்கர் உள்ளிட்டோர் சென்னையில் உள்ள பிரபல திரையரங்கில் ரசிகர்களுடன் முதல் காட்சியை பார்த்து ரசித்துள்ளனர்.இதுகுறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி வைரலாகி வருகின்றன.