கன்னட சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கிச்சா சுதீப்.தனக்கென ஒரு பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார்.கன்னடம் மட்டுமின்றி தமிழ்,தெலுங்கு,ஹிந்தி என்று பல மொழிகளிலும் நடித்து இந்தியா முழுவதும் பிரபலமான நடிகராக உள்ளார் கிச்சா சுதீப்.

நான் ஈ,பாகுபலி,புலி,சைரா நரசிம்ம ரெட்டி போன்ற படங்களில் நடித்து தென்னிந்திய ரசிகர்களுக்கு மிகவும் பரிட்சயமான ஒரு நடிகராக சுதீப் மாறினார்.இவர் ஹீரோவாக நடித்த Kotigobba 3 திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இதனை அடுத்து விக்ராந்த் ரோணா,Kabzaa உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் சுதீப்.விக்ராந்த் ரோணா படத்தினை அனுப் பந்தாரி எழுதி இயக்கியுள்ளார்.ஜீ ஸ்டுடியோஸ்,கிச்சா கிரியேஷன்ஸ்,ஷாலினி ஆர்ட்ஸ்,இன்வெனியோ பிலிம்ஸ் இந்தியா இந்த படத்தினை இணைந்து தயாரித்துள்ளனர்.நீதா அசோக் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.

பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் வருகிறார்.இந்த படம் பிரம்மாண்டமாக 3D-யில் இந்தியாவின் முக்கிய மொழிகளில் வெளியிடப்படவுள்ளது.தற்போது இந்த படத்தின் அசத்தலான ஒரு டீஸருடன் இந்த படம் ஜூலை 28ஆம் தேதி வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.இந்த டீஸரை கீழே உள்ள லிங்கில் காணலாம்