விக்ரம் பிரபு நடிப்பில் சமீபத்தில் வெளியாகி சீராக ஓடிய திரைப்படம் வானம் கொட்டட்டும். இப்படத்தை தொடர்ந்து அவரது நடிப்பில் அசுரகுரு என்ற திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தை அறிமுக இயக்குனர் ராஜ்தீப் இயக்கியுள்ளார். இவர் இயக்குனர் மோகன் ராஜாவிடம் உதவியாளராக பணிபுரிந்தவர் என்பது சிறப்பு தகவல். 

yogibabu Vikramprabhu

இந்த படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக மஹிமா நடித்துள்ளார். மேலும் யோகி பாபு, ஜகன், முனீஸ்காந்த் ஆகியோர் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் முடிந்து, பின்னணி வேலைகளும் நடந்து முடிந்தது. கணேஷ் ராகவேந்திரா இசையமைத்துள்ளார். இப்படத்தை மார்ச் 13-ம் தேதி வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். 

Asuraguru asuraguru vikramprabhu

தற்போது படத்தின் ப்ரோமோ வீடியோ வெளியானது. ஆக்ஷன் கலந்த விறுவிறுப்பான காட்சிகள் படத்திற்கு கூடுதல் வலு என்றே கூறலாம். குறிப்பாக ஓடும் ரயிலில் விக்ரம் பிரபு செய்யும் சாகசங்கள் ஈர்க்கும்படி இடம்பெற்றுள்ளது.