இந்திய சினிமாவின் முன்னணி கதாநாயகிகளில் ஒருவராக திகழும் நடிகை டாப்ஸி .கடைசியாக நடிகை டாப்ஸி நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ஹஸீன் தில்ரூபா. இத்திரைப்படம் நேரடியாக நெட்ஃபிலிக்ஸில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது.  இதனை தொடர்ந்து ராஷ்மி ராக்கெட், லூப் லப்பேட்டா, தோபாரா ஆகிய பாலிவுட் திரைப்படங்கள் தயாராகி வருகின்றன.

மேலும் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி வீராங்கனையான மிதாலி ராஜ்-ன் பயோபிக் திரைப்படமாக தயாராகும் சபாஷ் மித்து திரைப்படத்திலும் நடிக்கிறார். சமீபத்தில் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ள நடிகை டாப்ஸியின் தயாரிப்பில் உருவாகும் ப்ளர் திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்ததாக தமிழில் தயாராகும் ஆனபெல் சுப்ரமணியம் & ஜண கண மண ஆகிய திரைப்படங்களிலும் நடித்துள்ள நடிகை டாப்சி நடிப்பில் நேரடி தெலுங்கு திரைப்படமாக தயாராகி வருகிறது மிஷன் இம்பாஸிபிள். இயக்குனர் ஸ்வரூப் இயக்கத்தில் உருவாகும் மிஷன் இம்பாசிபிள் திரைப்படத்தை மேட்டனி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. மார்க்.கே.ராபின் இசையமைக்கிறார். 

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு முக்கிய நடிகர் இப்படத்தில் இணைந்துள்ளார். நடிகர்கள் விஜய் சேதுபதி & மாதவன் இணைந்து நடித்து வெளிவந்து சூப்பர் ஹிட்டான விக்ரம் வேதா படத்தில் சேட்டா என்னும் கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்த நடிகர் ஹரிஷ் பெரடி இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகியுள்ளது. மேலும் மிஷின் இம்பாசிபிள் திரைப்படத்தின் டீசர் & டிரைலர் உள்ளிட்ட அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.