எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் அதில் தனது அசாத்திய நடிப்பை வெளிப்படுத்தி இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து வருபவர் கமல்ஹாசன்.இவர் அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகி வரும் விக்ரம் படத்தில் நடித்துள்ளார்.இந்த படம் ஜூன் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் இந்த படத்தினை தயாரித்துள்ளனர்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளளார்.மக்கள் செல்வன் விஜய்சேதுபதி, பஹத் பாசில் உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.இவர்களுடன் நரைன்,அர்ஜுன் தாஸ்,காளிதாஸ் ஜெயராம்,காயத்ரி,பிக்பாஸ் ஷிவானி,மைனா,மஹேஸ்வரி VJ,ஸ்வாதிஷ்டா,ஸ்ரீகுமார்கணேஷ் என பல நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த படத்தில் சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளனர்.இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

தற்போது இந்த படத்தின் எமோஷனல் பாடலான போர்கொண்ட சிங்கம் பாடலின் லிரிக் வீடீயோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.உருக்கமான இந்த பாடல் லிரிக் வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்