விக்ரம் படத்தின் செம மாஸ் ஸ்பெஷல் போஸ்டர் !
By Aravind Selvam | Galatta | August 11, 2021 20:47 PM IST

மாநகரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ்.இந்த படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.முதல் படத்திலேயே கவனம் ஈர்த்த லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக கார்த்தி நடித்த கைதி படத்தினை இயக்கினார்.
இந்த படமும் ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் பெரிய வரவேற்பை பெற்றது.வளர்ந்து வரும் முன்னணி இளம் இயக்குனர்களில் ஒருவராக தவிர்க்க முடியாத ஒரு இடத்தினை பிடித்தார் லோகேஷ்.அடுத்ததாக தளபதி விஜய் நடித்த மாஸ்டர் படத்தினை இயக்கினார்.இந்த படமும் ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற முன்னணி இயக்குனர்களில் ஒருவராக உருவெடுத்தார் லோகேஷ்.
மாஸ்டர் படத்திற்கு அடுத்ததாக கமல்ஹாசன் நடிக்கும் விக்ரம் படத்தினை இயக்கவுள்ளார் லோகேஷ்.ராஜ் கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கிறார்.ஃபஹத் பாசில்,விஜய்சேதுபதி,நரைன்,அர்
இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.இந்த படத்தின் ஷூட்டிங் சமீபத்தில் தொடங்கி.விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.கமல்ஹாசன் திரைத்துறைக்கு வந்து 62 ஆண்டுகள் ஆனதை முன்னிட்டு ஒரு புதிய போஸ்ட்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
Keep inspiring us sir 🙏#62YearsOfKamalism pic.twitter.com/Sr4PH6vNZd
— Lokesh Kanagaraj (@Dir_Lokesh) August 11, 2021
Prakash Raj's surgery turns successful - actor shares picture from hospital
11/08/2021 07:20 PM
Kamal Haasan's Vikram - Semma Mass Surprise Poster Released | Check Out
11/08/2021 06:52 PM