நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடித்த ஜகமே தந்திரம் திரைப்படத்திற்குப் பிறகு இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் அடுத்து வெளிவர உள்ள திரைப்படம் சியான் 60. சியான் 60 திரைப்படத்தில் நடிகர் விக்ரம் மற்றும் துருவ் விக்ரம் இணைந்து நடித்துள்ளனர்.நடிகர் விக்ரமுடன் இணைந்து நடிகைகள் வாணி போஜன், சிம்ரன்  மற்றும் நடிகர் பாபி சிம்ஹா முக்கிய நடிக்கின்றனர்.

முதல் முறை சியான் விக்ரமுடன் இணைந்துள்ள இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் எழுதி இயக்கும் சீயான் 60 திரைப்படத்தை ஸெவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் S.S.லலித் குமார் தயாரிக்கிறார். ஒளிப்பதிவாளர் ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்துள்ளார். 
 
விறுவிறுப்பாக நடைபெற்று வந்த சியான் படப்பிடிப்பு நேற்று நிறைவு பெற்றது. இதனையடுத்து தற்போது நடிகர் சியான் விக்ரம் மற்றும் அவரது மகனான துருவ் விக்ரம் இணைந்து நடித்திருக்கும் சியான் 60 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நடிகர் சியான் விக்ரம் நடித்துள்ள சியான் 60 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வருகிற ஆகஸ்ட் 20-ஆம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிவிக்கும் விதமாக நடிகர் சியான் விக்ரமின் மாஸ்ஸான ஒரு போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. அந்தப் போஸ்டர் இதோ...