விக்ரம் பிறந்தநாளுக்கு வெளியாகிறதா கோப்ரா டீஸர்...? இயக்குனரின் பதில் இதோ
By Aravind Selvam | Galatta | April 05, 2020 18:59 PM IST
கடாரம் கொண்டான் படத்தின் ரிலீஸை தொடர்ந்து சீயான் விக்ரம் நடிக்கவிருக்கும் படம் விக்ரம் 58.டிமான்டி காலனி,இமைக்கா நொடிகள் உள்ளிட்ட படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இந்த படத்தை இயக்குகிறார்.இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
Viacom 18 மோஷன் பிக்சர்ஸ் மற்றும் Seven screen ஸ்டுடியோ இணைந்து இந்த படத்தை தயாரிக்கின்றனர்.
பிரபல கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.ஸ்ரீநிதி ஷெட்டி இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.
இந்த படத்திற்கு கோப்ரா என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.கொரோனா காரணமாக இந்த படத்தின் ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது.
இந்த படத்தின் டீசரை விக்ரமின் பிறந்தநாள் ஆன ஏப்ரல் 17ஆம் தேதி வெளியிட வாய்ப்புள்ளதா என்று ரசிகர் ஒருவர் இயக்குனர் அஜய் ஞானமுத்திடம் கேட்டார்.அதற்கு பதிலளித்த இயக்குனர் அனைத்து ஸ்டுடியோக்களும் பூட்டிய நிலையில் உள்ளது இது நடப்பது சாத்தியமில்லை என்று தெளிவுபடுத்தினார்.