பல வருடங்கள் கழித்து மை டியர் லிசா என்ற பெயரில் திகில் திரைப்படம் வெளியாகிறது. 1987-ம் ஆண்டு வெளியான பேய் படம் மை டியர் லிசா. இந்தப் படம் மலையாளத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்றது. அதன் பிறகு தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. 

mydearlisa mydearlisa

தற்போது இதே பெயரில் மீண்டும் வருகிறது. இதில் விஜய் வசந்த் ஹீரோவாக நடிக்கிறார், ஜோடியாக சாந்தினி தமிழரசன் நடிக்கிறார். இந்தப் படத்தை அறிமுக இயக்குனர் ரஞ்சன் கிருஷ்ணதேவன் இயக்குகிறார். ஸ்ரீ நிதி பிலிம்ஸ் தயாரிப்பில் சிங்கம் புலி,ஆடுகளம் நரேன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் நடிக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் ஊட்டி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் படமாக்கப்பட்டுள்ளது. சாஜன் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு உதயகுமார் இசையமைக்கிறார். விஜய் வசந்த் இறுதியாக சிவகார்த்திகேயன் நடித்த வேலைக்காரன் படத்தில் நடித்தார். 

mydearlisa

தற்போது இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது. நடிகர் ஆர்யா இந்த மோஷன் போஸ்டரை வெளியிட்டார். செக்யூரிட்டியாக கையில் டார்ச் லைட்டுடன் வருகிறார் நாயகன்.