விஜய் சேதுபதி ப்ரோடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான ஒரு மணி நேர வெப் திரைப்படம் முகிழ். இந்த படத்தில் ரெஜினா கசண்ட்ரா மற்றும் விஜய் சேதுபதி முக்கிய ரோலில் நடித்துள்ளனர். கார்த்திக் ஸ்வாமிநாதன் இயக்கியுள்ள இப்படத்தின் ட்ரைலர் புத்தாண்டு நாளான இன்று வெளியானது. கணவன், மனைவி, குழந்தை என அழகான குடும்பத்தை சுற்றி முகிழ் கதை நகர்கிறது. 

இந்த படத்திற்கு சத்யா பொன்மர் ஒளிப்பதிவு, கோவிந்த ராஜ் படத்தொகுப்பு, ரேவா இசையமைப்பு போன்ற பணிகளை செய்துள்ளனர். விஜய் சேதுபதியின் மகள் ஸ்ரீஜா விஜய்சேதுபதி முக்கிய ரோலில் நடித்துள்ளார். திரையுலகில் கால் பதிக்கும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் திரை ரசிகர்கள். 

விஜய் சேதுபதியின் மகன் சூரியா, நானும் ரவுடிதான் படத்தில் சின்ன வயது விஜய் சேதுபதியாக நடித்து அறிமுகமானார். அதன் பின் SU அருண் குமார் இயக்கிய சிந்துபாத் படத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் விஜய் சேதுபதியின் நண்பராக நடித்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் சூரியா.

மாஸ்டர் படத்தில் தளபதி விஜய்யுடன் இணைந்து நடித்துள்ள விஜய் சேதுபதியின் நடிப்பை காண ஆவலாக உள்ளனர் ரசிகர்கள். இது தவிர்த்து மணிகண்டன் இயக்கிய கடைசி விவசாயி, சீனு ராமசாமியின் மாமனிதன், வெங்கட கிருஷ்ணா ரோகந்தின் யாதும் ஊரே யாவரும் கேளிர் போன்ற படங்கள் விஜய் சேதுபதி கைவசம் உள்ளது. 

தற்போது விக்னேஷ் சிவன் இயக்கி வரும் காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்து வருகிறார் விஜய் சேதுபதி. இதில் நயன்தாரா மற்றும் சமந்தா நடிக்கின்றனர். செவன் ஸ்க்ரீன் நிறுவனம் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து இந்த படத்தை தயாரிக்கிறது. 

லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாநகரம் படமும் இந்தியில் ரீமேக்காகிறது. இதை சந்தோஷ் சிவன் இயக்குகிறார். இதை ஷிபு தமீன்ஸ் தயாரிக்க இருக்கிறார். இவர் புலி, இருமுகன், சாமி ஸ்கொயர் படங்களை தயாரித்த மலையாளத் தயாரிப்பாளர். ஒரு ஹீரோவாக விக்ராந்த் மாசே நடிக்கிறார். மற்றொரு வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார். அவர் நடிக்கும் முதல் இந்திப் படம் இது. தன்யா, சஞ்சய் மிஸ்ரா, ரன்வீர் ஷோரி, சச்சின் கெடேகர் உட்பட பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்துக்கு 'மும்பைகர்' என்று டைட்டில் வைத்துள்ளனர்.