லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் படம் தளபதி 64. இப்படத்தில், மாளவிகா மோகனன், ஸ்ரீமன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீநாத், நாகேந்திர பிரசாத், ரமேஷ் திலக் ஆகியோர் பலர் நடிக்கின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். டெல்லி கல்லூரியில் நடந்த படப்பிடிப்பில் VJ ரம்யா, 96 புகழ் கௌரி கிஷன், இணையதள புகழ் பிரிகிடா போன்றோர் நடித்தனர். 

thalapathy64 thalapathy64

ஷிமோகாவில் நடக்கும் படப்பிடிப்பில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கலந்து கொண்டார் என்ற தகவல் தெரியவந்தது. அதுமட்டுமல்லாமல் விஜய்சேதுபதி அரசியல் வாதியாக நடிக்கிறார் என்ற தகவலும் கிடைத்தது. படத்தின் முதல் லுக் போஸ்டர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாவதால் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர் தளபதி ரசிகர்கள். 

Vijaysethupathi

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி பற்றி ஒரு சிறப்பான தகவல் கலாட்டா செவிகளுக்கு எட்டியது. தற்போது சிறுவர் சீர்திருத்த பள்ளி கொண்ட செட் போடப்பட்டு படப்பிடிப்பு நடந்து வருகிறது. அதில் நடித்த ஜூனியர் ஆர்ட்டிஸ்டுகள் அனைவருக்கும் ரூபாய் 1000 வழங்கி உற்சாகப்படுத்தியுள்ளார். சிறுவர் சீர்திருத்த பள்ளி கொண்ட காட்சி என்பதால் பதினெட்டு வயதுக்கு உட்பட்ட ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்டுகளுக்கு இந்த தொகையை தந்து மகிழ்ந்துள்ளார் மக்கள் செல்வன். இப்படி பட்ட விஜய்சேதுபதியின் குணத்தை பாராட்டுவதில் பெருமை கொள்கிறது கலாட்டா.