சின்னத்திரையில் மெகா தொடர்களை எவ்வளவு ரசித்து பார்க்கிறார்களோ அதைவிட அதிகமாக ரியாலிட்டி நிகழ்ச்சிகளின் மீது ரசிகர்களுக்கு ஆர்வம் உண்டு என்றால் அது மிகையல்ல. அந்தவகையில் அடுத்ததாக உலகின் மிக பெரிய பிரம்மாண்ட ரியாலிட்டி நிகழ்ச்சியான சர்வைவர் தமிழில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தயாராகிறது. முதல்முறையாக ஆக்சன் கிங் அர்ஜுன் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சர்வைவர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார் . 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் எப்படி வெளி உலக தொடர்பு இல்லாமல் போட்டியாளர்களை 100 நாட்கள் ஒரு வீட்டில் தங்க வைத்து தினசரி பல டாஸ்க்குகள் கொடுத்து போட்டி நகர்கிறதோ, கிட்டத்தட்ட அதேபோல் போட்டியாளர்களை ஒரு சிறிய தீவில் திறந்த வெளியில் விட்டு விட்டு உணவு, இருப்பிடம் என அவர்களுக்கு தேவையான அனைத்தையும் அந்த தீவில் அவர்களே தயார் செய்து கொள்வது மற்றும் போட்டிக்கான டாஸ்க்குக்கள் நிறைந்ததே இந்த சர்வைவர் நிகழ்ச்சி.

இந்த நிகழ்ச்சியில் பங்கு பெறும் போட்டியாளர்களாக தமிழகத்தின் பல நட்சத்திரங்களின் பெயர்கள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன. குறிப்பாக ஜான் விஜய், நந்தா, வனிதா விஜயகுமார், விஜயலட்சுமி, வித்யூலேகா, ஷாலு ஷம்மு, ஸ்ரீ ரெட்டி, இந்திரஜா சங்கர் (ரோபோ சங்கரின் மகள்), சஞ்சனா சிங், VJ பார்வதி என பலரது பெயர்கள் பேசப்படும்  நிலையில் தற்போது ஒரு பிரபலம் அதை உறுதி செய்யும் விதமாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

பிரபல தமிழ் நடிகையான விஜயலட்சுமி தனது கணவர் மற்றும் மகனோடு இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து காலையிலிருந்து ஒரே ஃபீலிங்ஸ் அடேய் பாய்ஸ் ஐ லவ் யூ 3000 #willmissUbig #howtodothis என குறிப்பிட்டுள்ளார். எனவே நடிகை விஜயலட்சுமி  சர்வைவர் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதற்காகத்தான் இவ்வாறு பதிவிட்டுள்ளார் என தெரிகிறது. 

நடிகை விஜயலட்சுமி கிட்டத்தட்ட சர்வைவர் நிகழ்ச்சியில் பங்கு பெறுவதை உறுதி செய்துள்ளார் என பேச்சுகள் நிலவி வரும் நிலையில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வேறு யாரெல்லாம் போட்டியாளர்களாக கலந்து கொள்வார்கள் என்ற அறிவிப்பும் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Vijayalakshmi Ahathian (@itsvg)