தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்களில் ஒருவராக இருந்தவர் தியாகராஜன்.நடிகர் பிரபுவின் வெற்றி மேல் வெற்றி, விஜயகாந்த்தின் மாநகர காவல் உள்ளிட்ட பல வெற்றி படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமான இயக்குனராக இருந்தார் தியாகராஜன்.

விஜயகாந்த் நடிப்பில் உருவான 150ஆவது படமான மாநகர காவல் படத்தினை இவர் இயக்கி இருந்தார்.ஏ வி எம் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவான இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றிருந்தது.அடுத்து சில படங்களை இயக்கிய இவர் பின்னர் தனது சொந்த ஊரான அருப்புக்கோட்டையில் வாழ்ந்து வந்தார்.

பின்னர் வாய்ப்பு தேடி சில வருடங்களுக்கு முன் சென்னை வந்த தியாகராஜன் வாய்ப்பு கிடைக்காமல் இருந்துள்ளார்.வறுமையோடு உடல்நலமும் குறைந்து கொண்டே வந்துள்ளது.இந்நிலையில் இவர் இன்று காலை ஏ வி எம் ஸ்டுடியோஸ் வாசலில் மயங்கி விழுந்து இறந்து கிடந்துள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

இவரது உடலை போலீசார் பின்னர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.சில வருடங்களுக்கு முன் பெரிய இயக்குனராக இருந்த தியாகராஜன் இப்படி ரோட்டில் விழுந்து உயிரிழந்து கிடந்தது திரையுலகினர் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது