விஜய் டிவி தமிழ் தொலைக்காட்சிகளில் மக்களின் மனம் கவர்ந்த ஒரு சேனல்.தங்களது வித்தியாசமான நிகழ்ச்சிகள் மூலமாகவும்,தொடர்கள் மூலமாகவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர்.இந்த தொலைக்காட்சியில் வேலைபார்த்த பலரும் தற்போது சினிமாவில் பிரபலன்களாக உள்ளனர்.

சிவகார்த்திகேயன்,சந்தானம் போன்ற முக்கிய நடிகர்களை உருவாக்கியது விஜய் டிவி தான்.பல துணை நடிகர்கள்,காமெடி நடிகர்கள்,இயக்குனர்கள் கதாசிரியர்கள் என்று பலரையும் அடையாளம் கண்டுள்ளது விஜய் டிவி.மேலும் கலக்கப்போவது யாரு,சூப்பர் சிங்கர் உள்ளிட்ட தொடர்களின் மூலம் தமிழகத்தில் மூலை முடுக்கில் இருக்கும் திறமைகளையும் கண்டுபிடிக்க விஜய் டிவி தவறுவதில்லை.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்று சுந்தரி நீயும் சுந்தரன் நானும்.இந்த தொடர் சில மாதங்களுக்கு முன் நிறைவடைந்தது.வினோத் இந்த தொடரின் நாயகனாக நடித்து வந்தார்.தேஜஸ்வினி கௌடா இந்த தொடரின் ஹீரோயினாக நடித்து வந்தார்.இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வந்த ரஞ்சித் பாபுவிற்கு கடந்த மார்ச் மாதம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது,தற்போது தனக்கு திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது என்று சில புகைப்படங்களுடன் தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார்,இவருக்கு ரசிகர்களும் பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ranjit Konety (@ranjit__official__)