தமிழ் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் மக்களின் மனம் கவர்ந்த முக்கிய நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ்.இதுவரை நடந்து முடிந்த மூன்று சீசனும் பெரிய வெற்றியை பெற்றதோடு, நல்ல TRPயையும் பெற்றிருந்தது.இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார்.கமல்ஹாசனின் அரசியல் வசனங்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

இந்த தொடரில் பங்கேற்ற பிரபலங்கள் பட்டி தொட்டி எங்கும் உள்ள மக்களின் ஆதரவை பெற்று நட்சத்திரங்களாக உயர்ந்துள்ளனர்.முதல் மூன்று சீசன்களும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெட்ரா நிலையில் ,இதன் நான்காவது சீசன் வரும் அக்டோபர் 4ஆம் தேதி முதல் தொடங்குகிறது.கொரோனா தாக்கத்தால் ஷூட்டிங்குகள் பாதிக்கப்பட்டுள்ளதால் ஜூலையில் நடைபெறவிருந்த இந்த தொடரின் ஷூட்டிங் தள்ளிப்போனது.பிக்பாஸ் 4 தமிழ் ப்ரோமோ வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வந்தது.

வரும் அக்டோபர் 4ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை பிரம்மாண்டமாக பிக்பாஸ் தொடங்கும் என்று அறிவித்துள்ளனர் விஜய் டிவி.போட்டியாளர்கள் குறித்த அறிவிப்பு முதல் நாள் வரும் என்பது குறிப்பிடத்தக்கது.இதனை தொடர்ந்து திங்கள் முதல் ஞாயிறு வரை தினமும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று நேற்று அறிவித்திருந்தனர்.

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிவிட்டால் தொடர்களின் நிலை என்ற ரசிகர்களின் கேள்விக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது.விஜய் டிவி தொடர்களில் ஒளிபரப்பு நேரங்களில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது அந்த வகையில்,இரவு 9.30க்கு ஒளிபரப்பாகி வந்த செந்தூரப்பூவே தொடர் இரவு 7.30 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது,இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த தேன்மொழி BA இனி இரவு 10.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த சில நாட்களாக ஒரு மணிநேரமாக 7.30-8.30யாக ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் இனி 8.00-8.30 வரை ஒளிபரப்பாகும்.பாரதி கண்ணம்மா தொடர் வழக்கம் போல 8.30 முதல் 9.30 வரை ஒளிபரப்பாகும்.இவற்றை தவிர இன்னும் மௌன ராகம் 2,ராஜா ராணி 2 உள்ளிட்ட தொடர்களின் ஒளிப்பரப்பை விரைவில் விஜய் டிவி தொடங்கவுள்ளனர்.

பாக்கியலட்சுமி - மதியம் 12 ( மறுஒளிபரப்பு )
பாண்டியன் ஸ்டோர்ஸ் -  மதியம் 12.30 ( மறுஒளிபரப்பு )
பொம்முக்குட்டி அம்மாவுக்கு - மதியம் 1.00
பொண்ணுக்கு தங்க மனசு - மதியம் 1.30
சுந்தரி நீயும் சுந்தரன் நானும் - மதியம் 2.00
ஈரமான ரோஜாவே - மதியம் 2.30
அன்புடன் குஷி -  மதியம் 3.00
காற்றின் மொழி -  மதியம் 3.30 ( மறுஒளிபரப்பு )
தேன்மொழி BA - மாலை 4.00 ( மறுஒளிபரப்பு )
செந்தூரப்பூவே - மாலை 4.30 ( மறுஒளிபரப்பு )
ஈரமான ரோஜாவே - மாலை 5.00 ( மறுஒளிபரப்பு )
சுந்தரி நீயும் சுந்தரன் நானும் - மாலை 5.30 ( மறுஒளிபரப்பு )
காற்றின் மொழி - மாலை 6.00
பாக்கியலட்சுமி - மாலை 6.30
நாம் இருவர் நமக்கு இருவர் - இரவு 7.00 
செந்தூரப்பூவே - இரவு 7.30
பாண்டியன் ஸ்டோர்ஸ் - இரவு 8.00
பாரதி கண்ணம்மா - இரவு 8.30 - 9.30
பிக்பாஸ் - 9.30 - 10.30
தேன்மொழி BA - 10.30