தமிழில் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்திருப்பது விஜய் டிவி.இவர்களது வித்தியாசமான நிகழ்ச்சிகளுக்கென்று எப்போதும் ஏராளமான ரசிகர்கள் இருந்து வந்தனர்.இந்த தொலைக்காட்சியில் பணியாற்றிய பலரும் இப்போது வெள்ளித்திரையில் நட்சத்திரங்களாக ஜொலித்து வருகின்றனர்.

கடந்த சில வருடங்களாக விஜய் டிவியின் சீரியல்களும் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்று அசத்தி வருகின்றது.பல சூப்பர்ஹிட் தொடர்களின் மூலம் பல நட்சத்திரங்கள் மக்கள் மத்தியில் உருவாகியுள்ளனர்.

விஜய் டிவியின் பிரபல தொடர்களில் ஒன்று தேன்மொழி.விஜய் டிவியின் பிரபல தொகுப்பாளியான ஜாக்குலின் இந்த தொடரின் நாயகியாக நடித்து வருகிறார்.சித்தார்த் இந்த தொடரின் நாயகியாக அசத்தி வருகிறார்.இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த தொடர் 300 எபிசோடுகளை கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.இந்த தொடரில் ஜாக்குலினுக்கு அப்பாவாக நடித்து வந்த பிரபல சீரியல் குட்டி ரமேஷ் கடந்த மே மாதம் காலமானார் தற்போது இவருக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகர் நடிக்கிறார் இவரது எபிசோடுகள் இன்று முதல்ஒளிபரப்பை தொடங்கவுள்ளன.