விஜய் டிவியில் ஒளிபரப்பை தொடங்கி மக்களின் மனம் கவர்ந்த தொடராக மாறியிருக்கிறது செந்தூரப்பூவே தொடர்.ரஞ்சித் இந்த தொடரில் ஹீரோவாக நடித்து சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்துள்ளார்.இவருக்கு ஜோடியாக ஸ்ரீநிதி ஹீரோயினாக இந்த தொடரில் நடித்து வருகிறார்.

யமுனா சின்னதுரை,சாந்தி வில்லியம்ஸ்,ப்ரியா ராமன்,தீபா,சுஷ்மா நாயர் போன்ற நட்சத்திரங்கள் முக்கிய வேடத்தில் நடித்து அசத்தி வருகின்றனர்.இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான தொடராக அதிவிரைவில் அவதரித்தது.

பல விறுவிறுப்பான திருப்பங்களோடு சென்று வந்த இந்த தொடர் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டதால் சில மாதங்கள் நிறுத்தப்பட்டது.பிக்பாஸ் நிறைவடைந்த பின் இந்த தொடர் மீண்டும் தொடங்கப்பட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த தொடரில் நடிக்கும் நட்சத்திரங்களுக்கு தனி தனியாக பெரிய ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது.இந்த தொடர் ரசிகர்களுக்கு தற்போது ஒரு வருத்தமளிக்கும் செய்தி வந்துள்ளது.349 எபிசோடுகளுடன் இந்த தொடர் நிறைவுக்கு வந்துள்ளது.திடீரென இந்த தொடர் முடிக்கப்பட்டதால் ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.