விஜய் டிவி தமிழ் தொலைக்காட்சிகளில் மக்களின் மனம் கவர்ந்த ஒரு சேனல்.தங்களது வித்தியாசமான நிகழ்ச்சிகள் மூலமாகவும்,தொடர்கள் மூலமாகவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர்.இந்த தொலைக்காட்சியில் வேலைபார்த்த பலரும் தற்போது சினிமாவில் பிரபலன்களாக உள்ளனர்.

சிவகார்த்திகேயன்,சந்தானம் போன்ற முக்கிய நடிகர்களை உருவாக்கியது விஜய் டிவி தான்.பல துணை நடிகர்கள்,காமெடி நடிகர்கள்,இயக்குனர்கள் கதாசிரியர்கள் என்று பலரையும் அடையாளம் கண்டுள்ளது விஜய் டிவி.மேலும் கலக்கப்போவது யாரு,சூப்பர் சிங்கர் உள்ளிட்ட தொடர்களின் மூலம் தமிழகத்தில் மூலை முடுக்கில் இருக்கும் திறமைகளையும் கண்டுபிடிக்க விஜய் டிவி தவறுவதில்லை.

அப்படி கலக்கப்போவது யாரு தொடரின் மூலம் பிரபலமாக மாறியவர் புகழ்.இவரது லேடி கெட்டப் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வந்தது.தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் தமிழகம் முழுவதும் பிரபலமான ஒருவராக மாறிவிட்டார்.இவரது ஹேர்ஸ்டைலுக்கென்றே தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.

இந்த ஷோவில் இவரது காமெடி டைமிங் ரசிகர்களால் மிகவும் ரசிக்கப்பட்டது.தற்போது ஷூட்டிங்கிற்காக கோவை சென்றுள்ளார் புகழ்.அங்கு அவரது ஆதார் கார்டில் இருப்பதுபோல நேரில் இல்லை என்று ஏர்போர்ட்டில் அதிகாரிகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.அவர்களுக்கு புரியவைப்பதற்குள் போதும் போதும் என்று ஆகிவிட்டது என்று வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Ennoda hair ellarukum pudikum sonninga ana innaiku airport la na patta padu iruke andava😥#vijaytelevision #airport #coimbatore

A post shared by @ vijaytvpugazh on