விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.ஒளிபரப்பானது முதல் பெரிய வரவேற்பை இந்த தொடர் பெற்றிருந்ததது. ஸ்டாலின் , சுஜிதா ,குமரன்,வெங்கட்,ஹேமா,காவியா,சரவனவிக்ரம் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முன்னணி வேடங்களில் நடித்திருந்தனர்.

இந்த தொடரில் கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணவிக்ரமிற்கு ஜோடியாக சில மாதங்களுக்கு முன் இந்த தொடரில் இணைந்தவர் தீபிகா.சில சேனல்களில் தொகுப்பாளராக பணிபுரிந்து வந்த தீபிகா அடுத்ததாக கலர்ஸ் தமிழ் சீரியலில் சப்போர்டிங் ரோலில் நடித்து அசத்தினார்.

அடுத்ததாக பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் என்ட்ரி கொடுத்த இவருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்தது.பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்று வரும் இந்த தொடர் தொடர்ந்து நல்ல TRP-யையும் பெற்று வருகிறது.

இன்ஸ்டாகிராமில் செம ஆக்டிவ் ஆக இருக்கும் தீபிகா அவ்வப்போது தனது புகைப்படங்கள் வீடியோக்களை பகிர்ந்து வருவார் தீபிகா.நேற்று ரசிகர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு பதிலளித்து வந்த தீபிகா தனது பள்ளிப்பருவ புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.அடடே இவரா இது என்று ரசிகர்கள் ஆச்சரியத்துடன் இந்த புகைப்படத்தை பகிர்ந்து வருகின்றனர்.

vijay tv pandian stores serial vj deepika school photo goes viral