புதிய மைல்கல்லை எட்டியது பாண்டியன் ஸ்டோர்ஸ் ! உற்சாகத்தில் ரசிகர்கள்
By Aravind Selvam | Galatta | April 25, 2021 14:17 PM IST
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.ஒளிபரப்பானது முதல் பெரிய வரவேற்பை இந்த தொடர் பெற்றிருந்ததது.ஸ்டாலின்,சுஜிதா
இந்த தொடரில் முல்லை என்ற வேடத்தில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்திருந்த சித்ரா சில தினங்களுக்கு முன் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சித்ராவிற்கு நினைவஞ்சலி செலுத்திவிட்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினர் தங்கள் ஷூட்டிங்கை மீண்டும் தொடங்கினர்.சித்ரா நடித்துவந்த கதாபாத்திரத்தில் பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து வந்த காவியா அறிவுமணி நடித்துவருகிறார்.இந்த தொடரின் புதிய எபிசோடுகள் விறுவிறுப்பாக சென்று வருகின்றன.
பல விறுவிறுப்பான திருப்பாங்களோடு ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர் 600 எபிசோடுகளை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.இதனை இந்த தொடரின் ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர்.இந்த தொடரின் சிறப்பு எபிசோடுகள் இந்த வாரம் ஒளிபரப்பாகவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Actress Raiza Skin Treatment Controversy: Raiza issues big statement! Check Out!
24/04/2021 06:00 PM
Cook with Comali star Sivaangi shares an important life update - gets emotional!
24/04/2021 05:07 PM