பாண்டியன் ஸ்டோர்ஸில் புது என்ட்ரி ! விவரம் உள்ளே
By Aravind Selvam | Galatta | January 20, 2021 23:45 PM IST
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.ஒளிபரப்பானது முதல் பெரிய வரவேற்பை இந்த தொடர் பெற்றிருந்ததது.ஸ்டாலின்,சுஜிதா
இந்த தொடரில் முல்லை என்ற வேடத்தில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்திருந்த சித்ரா முன் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.இந்த வழக்கு குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
சித்ராவிற்கு நினைவஞ்சலி செலுத்திவிட்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினர் தங்கள் ஷூட்டிங்கை மீண்டும் தொடங்கினர்.சித்ரா நடித்துவந்த கதாபாத்திரத்தில் பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து வந்த காவியா அறிவுமணி நடித்துவருகிறார்.இந்த தொடரின் புதிய எபிசோடுகள் விறுவிறுப்பாக சென்று வருகின்றன.
காவியாவின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.தற்போது இந்த தொடரின் முக்கிய வேடத்தில் பிரபல சீரியல் நடிகை மீனாவின் அத்தையாக என்ட்ரி கொடுத்துள்ளார்,இதனை தொடர்ந்து கதை எப்படி நகரப்போகிறது என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
Bigg Boss Malayalam fame Alina Padikkal gets engaged to her boyfriend Rohit Nair
21/01/2021 04:16 PM
Vishnu Vishal releases new glimpse from his next film FIR - new update!
21/01/2021 03:21 PM
Khushbu's daughter Anandita Sundar's new photoshoot gets a huge response
21/01/2021 02:31 PM