விஜய் டிவியின் புகழ்பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று கலக்கப்போவது யாரு. இந்த நிகழ்ச்சியின் மூலம் பலரும் மக்கள் மத்தியில் நட்சத்திரங்களாக உயர்ந்துள்ளனர்,அதில் முக்கியமான ஒருவர் சிவகார்த்திகேயன் இந்த நிகழ்ச்சியில் வெற்றிபெற்று விஜய் டிவியின் தொகுப்பாளராக பணியாற்றி அடுத்து சினிமாவுக்குள் நுழைந்து அசத்தி வருகிறார்.

இவரை போல பலரும் தங்கள் திறமையை வெளிப்படுத்தி நட்சத்திரமாக முயற்சி செய்து வருகின்றனர்.இந்த நிகழ்ச்சிகளில் மூலம் பிரபலமான பலரும் மக்கள் மத்தியில் செம ரீச் ஆகி விடுவார்கள்.தங்கதுரை,ராமர்,ரோபோ ஷங்கர்,தாடி பாலாஜி,ஈரோடு மகேஷ் என்று இந்த வரிசையில் பலர் இருக்கின்றனர்.இந்த கலக்கப்போவது யாரு தொடரின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்த கலைஞர்களில் ஒருவர் நவீன்.

கலக்கப்போவது யாரு சீசன் 5-வில் அசத்திய நவீன் பலரிடமும் வெகுவாக பாராட்டை பெற்றிருந்தார்.இவர் சதீஷுடன் இணைந்து செய்த காமெடிகள் ரசிகர்களால் வெகுவாக பாராட்டப்பட்டது.மிமிக்கிரி கலைஞரான நவீன் பலரும் செய்யாத வித்தியாசமான குரல்களை மிமிக்கிரி செய்து அசத்துவதில் வல்லவர்,அப்துல் கலாம்,எம்.எஸ்.விஸ்வநாதன் உள்ளிட்ட சில இதற்கு எடுத்துக்காட்டுகள்.

சூர்யாவின் சூரரைப் போற்று படத்தில் அப்துல் காலம் கதாபாத்திரத்துக்கு இவர் தான் குரல் கொடுத்திருந்தார்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார் நவீன்.அடுத்ததாக விஜய் டிவியின் பாவம் கணேசன் என்ற புதிய தொடரில் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்த தொடரில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த கல்யாண பரிசு தொடரில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த நேஹா கௌடா ஹீரோயினாக நடித்துள்ளார்.கடந்த ஜனவரி முதல் இந்த தொடர் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்தது.முதலில் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த இந்த தொடர் அடுத்ததாக 7.30 மணிக்கு மாற்றப்பட்டது.தற்போது இந்த தொடர் இரவு 10 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது என்ற அறிவிப்பை விஜய் டிவி வெளியிட்டுள்ளனர்.