தமிழின் முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக திகழ்ந்து வருவது விஜய் டிவி.20 வருடங்களுக்கும் மேலாக தங்களின் வித்தியாசமான தொடர்கள் மூலமாகவும்,விறுவிறுப்பான தொடர்கள் மூலமாகவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து விட்டனர்.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடர்களுக்கு ரசிகர்களுக்கு மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.இந்த தொடர்களில் நடித்து பலரும் தங்களுக்கென ரசிகர் பட்டாளங்கள் உருவாகும் அப்படி பலரும் நட்சத்திரங்களாக அவதரித்துள்ளனர்.

விஜய் டிவி சீரியல் குடும்பத்தில் புதிதாக இணையவுள்ள ஒரு சீரியல் பாரதிதாசன் காலனி.இந்த தொடர் ஜூன் 20 முதல் மாலை 6.30 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது.இந்த தொடரில் பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்துள்ளனர்.

ஐஸ்வர்யா இந்த தொடரின் நாயகியாக நடித்துளளார்.வசந்த் இந்த தொடரின் நாயகனாக நடித்துள்ளார்.இந்த தொடரின் அறிவிப்பு ப்ரோமோவை விஜய் டிவி சில வாரங்களுக்கு முன் வெளியிட்டனர்.இந்த தொடரின் ஒளிபரப்பை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.