களைகட்டும் விஜய் டிவியின் புதிய காமெடி நிகழ்ச்சி ! வைரல் ப்ரோமோ
By Aravind Selvam | Galatta | June 24, 2021 15:14 PM IST
விஜய் டிவி தமிழ் தொலைக்காட்சிகளில் மக்களின் மனம் கவர்ந்த ஒரு சேனல்.தங்களது வித்தியாசமான நிகழ்ச்சிகள் மூலமாகவும்,தொடர்கள் மூலமாகவும் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டனர்.இந்த தொலைக்காட்சியில் வேலைபார்த்த பலரும் தற்போது சினிமாவில் பிரபலன்களாக உள்ளனர்.
சிவகார்த்திகேயன்,சந்தானம் போன்ற முக்கிய நடிகர்களை உருவாக்கியது விஜய் டிவி தான்.பல துணை நடிகர்கள்,காமெடி நடிகர்கள்,இயக்குனர்கள் கதாசிரியர்கள் என்று பலரையும் அடையாளம் கண்டுள்ளது விஜய் டிவி.மேலும் கலக்கப்போவது யாரு,சூப்பர் சிங்கர் உள்ளிட்ட தொடர்களின் மூலம் தமிழகத்தில் மூலை முடுக்கில் இருக்கும் திறமைகளையும் கண்டுபிடிக்க விஜய் டிவி தவறுவதில்லை.
பிக்பாஸ்,குக் வித் கோமாளி என்று தமிழ் ரசிகர்களுக்கு வித்தியாசமான வெற்றிகரமான தொடர்களை தொடர்ந்து விஜய் டிவி ஒளிபரப்பி வருகின்றனர்.இந்த நிகழ்ச்சிகள் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றும் வருகின்றன.சமீபத்தில் கூட பிக்பாஸ் நட்சத்திரங்களை இணைத்து பிக்பாஸ் ஜோடிகள் நிகழ்ச்சியை தொடங்கினர்.
அடுத்ததாக சீரியல் மற்றும் காமெடி நட்சத்திரங்களை ஒன்றிணைத்து காமெடி ராஜா கலக்கல் ராணி என்ற புது நிகழ்ச்சியை ஜூன் 27 முதல் ஒளிபரப்பவுள்ளனர்,இதன் முதல் ப்ரோமோவை விஜய் டிவி தற்போது வெளியிட்டுள்ளனர்.பல குக் வித் கோமாளி பிரபலன்களோடு சீரியல் பிரபலங்களும் இணையும் இந்த நிகழ்ச்சிக்கு பாபா பாஸ்கர்,மதுரை முத்து,நடிகை ஐஸ்வர்யா நடுவர்களாக உள்ளனர்.ரக்ஷன் மற்றும் பிரியங்கா இந்த தொடரை தொகுத்து வழங்குகின்றனர்.
Raghava Lawrence's next film officially announced - teams up with Vetri Maaran
24/06/2021 06:38 PM
Actress Neelima's trending statement about Cook with Comali 3 - Check Out!
24/06/2021 05:50 PM