சின்னத்திரையின் பிரபல சீரியல் நாடிகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் ஜனனி அசோக் குமார்.விஜய் டிவியின் பிரபல தொடரான மாப்பிள்ளை தொடரின் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவராக மாறியவர்.இந்த தொடரில் இவரது நடிப்பு பலரையும் ஈர்த்திருந்தது.

தொடர்ந்து விஜய் டிவியின் சூப்பர்ஹிட் தொடர்களான மௌன ராகம்,ஆயுத எழுத்து உள்ளிட்ட தொடர்களில் முக்கிய வேடத்தில் நடித்து தொடர்ந்து ரசிகர்களுக்கு பிடித்த நடிகையாக அசத்தினார் ஜனனி அசோக் குமார்.அடுத்ததாக ஜீ தமிழின் செம்பருத்தி தொடரில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து அசத்தினார் ஜனனி.

இந்த தொடரில் முதலில் வில்லியாக அசத்திய ஜனனி பின்னர் ட்ராக் மாறி இரண்டாவது ஹீரோயினாகவும் அசத்தி வந்தார்.இந்த தொடரில் இருந்து திடிரென்று நீக்கப்பட்டார் ஜனனி.தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் தொடரில் நடித்து அசத்தி வருகிறார் ஜனனி.

தற்போது இவருக்கு விரைவில் திருமணம் நடைபெறவிருப்பது தெரியவந்துள்ளது.பாக்கியலக்ஷ்மி தொடரில் செழியனாக நடித்து வரும் ஆர்யனுடன் இவருக்கு விரைவில் திருமணம் நடைபெறவிருப்பது தெரியவந்துள்ளது.ரசிகர்களுடனான கேள்வி பதிலின் போது ஆர்யன் இதனை உறுதி செய்துள்ளார்.இருவருக்கும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

vijay tv fame janani ashok kumar and aryan to get married soon