விஜய் டிவியின் முன்னணி தொகுப்பாளிகளில் ஒருவராக திகழ்ந்து வருபவர் ஜாக்குலின்.கலக்கப்போவது யாரு தொடரின் மூலம் பிரபலமான இவர் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு தனி இடம் பிடித்தார்.இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான ஆண்டாள் அழகர் தொடரில் தேனு என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானார்.

இவர் தொகுத்து வழங்கிய கலக்கப்போவது யாரு உள்ளிட்ட சில தொடர்கள் செம ஹிட் அடித்தன.அடுத்ததாக நயன்தாரா நடிப்பில் உருவான கோலமாவு கோகிலா படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.இந்த படத்தில் இவர் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தேன்மொழி BA தொடரில் ஹீரோயினாக நடிக்கத்தொடங்கினார் ஜாக்குலின்.இந்த தொடர் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இந்த தொடரில் சித்தார்த் நடித்துள்ளார்.இந்த தொடர் விறுவிறுப்பான கட்டத்தில் சென்று வருகிறது.

இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தன் வாழ்க்கையில் அடுத்த கட்டத்திற்கு செல்லப்போவதாக ஒரு பதிவிட்டிருந்தார்.இதனை பார்த்த பலரும் திருமணமா என்று கேள்வி எழுப்பி வந்தனர்.இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதலர் தினத்தன்று ஒரு செய்தியை அறிவிப்பதாக குக் வித் கோமாளி புகழுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.இது ஏதேனும் புதிய நிகழ்ச்சி அல்லது படம் குறித்த அறிவிப்பா,அல்லது இருவரும் காதலிக்கின்றனரா போன்ற பல கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் உலவி வருகிறது.இவற்றிருக்கான விடையை நாம் பிப்ரவரி 14 வரை காத்திருந்து தான் தெரிந்துகொள்ள வேண்டும் என்று தெரிகிறது.