உலகையே அச்சுறுத்தி வரும் COVID-19 எனப்படும் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது.தமிழகத்தில் இந்த வைரஸின் தாக்கம் அதிகரித்துவரும் நிலையில் அதனை கட்டுக்குள் கொண்டு வர தமிழக அரசு தங்களால் முடிந்த வேலைகளை செய்து வருகின்றனர்.

Vijay TV Donates 75 Lakhs For its Workers Corona

கொரோனா குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இதனால் பலதரப்பு மக்களும் பாதிக்கப்பட்டுள்ளள்ளனர்.

Vijay TV Donates 75 Lakhs For its Workers Corona

சினிமா,சீரியல்,டிவி நிகழ்ச்சிகள் உள்ளிட்ட ஷூட்டிங்குகளும் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.இதனால் பாதிக்கப்பட்ட பலருக்கும் பல பிரபலங்கள் உதவி வருகின்றனர்.தற்போது தமிழகத்தில் பிரபலமான தொலைக்காட்சிகளில் ஒன்று ஸ்டார் விஜய்.

Vijay TV Donates 75 Lakhs For its Workers Corona

தங்கள் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த சீரியல்,நிகழ்ச்சி உள்ளிட்டவற்றில் வேலைபார்த்தவர்களுக்கு ரூ.75 லட்ச ருபாய் உதவித்தொகையாக அந்தந்த தயாரிப்பு நிறுவனங்களுக்கு பிரித்து வழங்கியுள்ளனர் என்ற தகவல் கிடைத்துள்ளது.இந்த கஷ்டமான சமயத்தில் தங்களுக்கு உதவி செய்த விஜய் டிவிக்கு பலரும் தங்கள் நன்றியை தெரிவித்து வருகின்றனர்.

Vijay TV Donates 75 Lakhs For its Workers Corona