வித்தியாசம் என்ற பெயருக்கு மறுவார்த்தையாக தமிழ் தொலைக்காட்சிகளில் வலம் வருவது விஜய் டிவி.இந்த தொலைக்காட்சியில் வேலைபார்த்த பலரும் தற்போது சினிமாவில் பிரபலன்களாக உள்ளனர்.சிவகார்த்திகேயன்,சந்தானம் போன்ற முக்கிய நடிகர்களை உருவாக்கியது விஜய் டிவி தான்.பல துணை நடிகர்கள்,காமெடி நடிகர்கள்,இயக்குனர்கள் கதாசிரியர்கள் என்று பலரையும் அடையாளம் கண்டுள்ளது விஜய் டிவி.

மேலும் கலக்கப்போவது யாரு,சூப்பர் சிங்கர் உள்ளிட்ட தொடர்களின் மூலம் தமிழகத்தில் மூலை முடுக்கில் இருக்கும் திறமைகளையும் கண்டுபிடிக்க விஜய் டிவி தவறுவதில்லை.பிக்பாஸ்,ஜோடி போன்ற பல ரியாலிட்டி ஷோக்களையும் புதுமையான பல நிகழ்ச்சிகளையும் தற்போது வரை கொடுத்து வருகிறது விஜய் டிவி.விஜய் டிவியின் மற்றுமொரு முக்கிய அம்சம் தொடர்கள்.

விஜய் டிவி பல வெற்றி தொடர்களை தந்து ரசிகர்களிடம் விஜய் டிவி தொடர்களுக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்துள்ளது.தற்போதும் விஜய் டிவியின் தொடர்கள் TRP-யில் கலக்கி வருகின்றன.விஜய் டிவியின் வெற்றிகரமான தொடர்களில் ஒன்று பொம்முக்குட்டி அம்மாவுக்கு.ரேத்வா என்ற குழந்தை நட்சத்திரம் பொம்முவாக நடித்து வருகிறார்.

கிரண்,ராஷ்மிதா ரோஜா இந்த தொடரின் ஹீரோ,ஹீரோயினாக அசத்தி வருகின்றனர்.ஸ்ரீதேவி அசோக்,ஸ்ருதி ஷண்முகப்ரியா உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.இந்த தொடரின் நாயகி ரஷ்மிதாவிற்கு சில தினங்களுக்கு முன் திருமணம் முடிந்தது குறிப்பிடத்தக்கது.இந்த தொடர் விறுவிறுப்பான கட்டத்தில் நகர்ந்து வந்தது,இந்நிலையில் இன்றுடன் இந்த சீரியல் நிறைவு பெறுகிறது.இது குறித்து படக்குழுவினர் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.திடீரென்று இந்த சீரியல் முடிக்கப்படுவதால் ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

A post shared by 🇮🇳K A R T H I C K🇮🇳 (@karthick_sudhakar)