கோலாகலமாக தொடங்கப்பட்ட விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி கலகலப்பாக முதல் வாரத்தை கடந்துள்ளது. ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்த நமீதா மாரிமுத்து எதிர்பாராதவிதமாக பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறியது பலருக்கும் அதிர்ச்சியும் ஏமாற்றத்தையும் அளித்தது.

17 போட்டியாளர்களுடன் தொடர்நத பிக் பாஸில் 2-ம் வாரத்தின் ஆரம்பமே கேப்டன் தேர்வு & நாமினேஷன் என தொடங்கியது. தாமரைச்செல்வி பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சியின் முதல் கேப்டனாக தேர்வானார். தொடர்ந்து நடைபெற்ற நாமினேஷன் பிராசஸில் தாமரைச்செல்வி & பாவனியைத் தவிர மற்ற அனைவரும் நாமினேட் செய்யப்பட்டனர்.

கடந்த வாரம் தொடங்கப்பட்ட ஒரு கதை சொல்லட்டா டாஸ்க் இந்த வாரமும் தொடர்கிறது. முன்னதாக தாமரைச்செல்வி பிரிந்து சென்ற தன் மகன் பற்றி உருக்கமாக பேசியது போட்டியாளர்களை கலங்கவைத்தது. அடுத்து அபிஷேக் தான் கடந்து வந்த பாதையை பகிர்ந்து கொண்டிருக்க ராஜூவும்  இமான் அண்ணாச்சியும் அதை விமர்சனம் செய்யும் ப்ரோமோ வீடியோ இன்று வெளியானது.

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் 3-வது ப்ரோமோ வீடியோ சற்றுமுன் வெளியானது. அதில் வருத்தத்தில் இருக்கும் தாமரைச்செல்வியை பாவனியும் ஐக்கி பெர்ரியும் சமாதானப்படுத்திக் கொண்டிருக்க அபிஷேக் ராஜா, தாமரைச்செல்வியின் பேச்சு குறித்து நெகிழ்ச்சியோடு புகழ்ந்து பேசும் இந்த ப்ரோமோ வீடியோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்.