கோலாகலமாக 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய விஜய் டிவியின் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி 2 வாரங்களை கடந்து 3-வது வாரத்தில் பரபரப்பை எட்டியுள்ளது. இதுவரை முதல் வாரத்தில் நமீதா மாரிமுத்து மற்றும் கடந்த வாரத்தில் நாடியா சாங் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.

விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 3-வது வாரத்தில் சிபி வீட்டின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், தொடர்ந்து தற்போது நடைபெற்று வரும் பஞ்ச நாணயம் லக்சரி பட்ஜெட் டாஸ்க்-ல் ஒவ்வொரு போட்டியாளர்களும் அவர்களை காப்பாற்றி கொள்ளவும் அல்லது அவர்களுக்கு விருப்பமான போட்டியாளர்களை காப்பாற்றவும் மிகுந்த முனைப்போடு விளையாடி வருகின்றனர். 

இந்த வகையில் நேற்று போட்டியில் நாணயத்தை எடுக்கும்போது மாட்டிக்கொண்ட நிரூப் பிரியங்கா சுருதி ஆகியோர் பாதாள சிறைக்கு அனுப்பப்பட்டனர்.நாணயத்தை ஒருவர் கைப்பற்றுவதும் அவரிடமிருந்து மற்றொருவர் திருடுவதும் அவரிடமிருந்து வேறு ஒருவர் கைப்பற்றுவதும் மற்றும் காரசாரமான விவாதங்கள் என நேற்றைய நிகழ்ச்சி நிறைவடைந்தது

இந்நிலையில் இன்றைய நிகழ்ச்சியின் முதல் ப்ரோமோ வீடியோ சற்று முன்பு வெளியானது. வீட்டில் டைனிங் டேபிளில் அனைத்து போட்டியாளர்களும் ஒன்றாக அமர்ந்து இருக்க சிபி தன்னை நெருப்பு என்றும் தன்னை சீண்டுபவரை சுட்டு விடுவேன் என்றும் பேசுகிறார். அந்த புதிய ப்ரோமோ வீடியோ இதோ…