வழக்கம் போல ரசிகர்களின் பேராதரவோடு வெற்றிகரமாக நகர்கிறது விஜய் தொலைக்காட்சியின் பிக் பாஸ் தமிழ் சீசன் 5 நிகழ்ச்சி. முதல்வாரத்திலேயே நமீதா மாரிமுத்து தவிர்க்க முடியாத காரணங்களால் வெளியேற, அடுத்த வாரத்தில் முதல் எலிமினேஷனாக நாடியா சாங் வெளியேறினார்.

இதனையடுத்து கடந்த வாரத்தில் முதல் லக்சரி பட்ஜெட் டாஸ்க் நடைபெற்றது. இதில் போட்டியாளர்கள் நாணயங்களை கைப்பற்றி அவர்களுக்கான சிறப்பு சலுகைகளையும் பெற்றுள்ளனர். பரபரப்பாக நடைபெற்ற கடந்த வாரத்தின் இறுதியில் நேற்று அபிஷேக் ராஜா எலிமினேட் செய்யப்பட்டார்.

தொடர்ந்து தற்போது பிக் பாஸ் சீசன் 5-ல் 4-வது வாரத்தின் தொடக்கத்தில் இன்று (அக்டோபர் 25-ம் தேதி) நாமினேஷன் ப்ராசஸ் நடைபெறுகிறது. இதில் ஒவ்வொரு போட்டியாளர்களும் ஆக்டிவிட்டி ஏரியாவில் வைக்கப்பட்டுள்ள நெருப்பின் முன் நின்று அவர்கள் நாமினேட் செய்யும் போட்டியாளரின் பெயர் மற்றும் காரணத்தை தெரிவித்து அவர்களது புகைப்படத்தை நெருப்பில் இட்டு நாமினேட் செய்கிறார்கள்.

இந்நிலையில் இன்றைய (அக்டோபர் 25-ம் தேதி) நிகழ்ச்சியின் புதிய ப்ரோமோ வீடியோ  சற்று முன் வெளியானது. இதில் போட்டியாளர்கள் ஒருவரை ஒருவர் நாமினேட் செய்கிறார்கள். குறிப்பாக அனேக போட்டியாளர்கள் பிரியங்காவை நாமினேட் செய்கிறார்கள்.  அந்தப் ப்ரோமோ வீடியோ இதோ...