விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பலரது கவனத்தையும் ஈர்க்கும் ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ்.இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலங்கள் மலர் மக்கள் மத்தியில் அடையாளம் பெற்று நட்சத்திரங்களாக மாறியுள்ளனர்.பல மொழிகளில் ஹிட் அடித்த இந்த நிகழ்ச்சியை சில வருடங்களுக்கு முன் விஜய் டிவி தமிழில் அறிமுகம் செய்தனர்.இந்த நிகழ்ச்சிக்கு எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பு கிடைத்தது.

முதல் மூன்று சீசன்களில் பங்கேற்ற பலரும் டிவி நிகழ்ச்சிகள்,படங்கள்,சீரியல் என்று ஏதேனும் ஒன்றில் செம பிஸியாக நடித்து வருகின்றனர்.இவர்களுக்கென்று தனி ஒரு ரசிகர் பட்டாளமே உருவானது.இதனை தொடர்ந்து கொரோனா வர நான்காவது சீசன் பிக்பாஸ் தள்ளிப்போனது.ஒருவழியாக சில மாதங்களுக்கு பிறகு பிக்பாஸ் சீசன் 4 விஜய் டிவியில் தொடங்கியது.

ஷிவானி,பாலா,ஆரி,ரியோ,அர்ச்சனா,நிஷா,கேப்ரியெல்லா,ஆஜீத்,ரேகா,சோம்சேகர்,ரம்யா பாண்டியன்,சுரேஷ் சக்ரவர்த்தி,அனிதா சம்பத்,சுசித்ரா,சம்யுக்தா,சனம் ஷெட்டி,வேல்முருகன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் கலந்துகொண்டனர்.ஆரி இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக 100 நாட்களுக்கு பிறகு தேர்ந்தேடுக்கப்பட்டார்.

விஜய் டிவி பிக்பாஸ் நட்சத்திரங்களை ஒன்றிணைத்து பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியை லாக்டவுனுக்கு முன் தொடங்கியது.கொரோனாவால் ஷூட்டிங் பாதிக்கப்பட்ட இந்த நிகழ்ச்சியின் ஷூட்டிங் தற்போது தொடங்கியுள்ளது என்று ரம்யாகிருஷ்னண் தனது சமூகவலைத்தள பக்கங்களில் பகிர்ந்துள்ளார்.