தமிழ் தொலைக்காட்சிகளில் பிரபலமான ஒரு நடிகையாக வலம் வருபவர்  ஸ்ரீதேவி அசோக்.கிட்டத்தட்ட அனைத்து முன்னணி சேனல்களிலும் வேலைபார்த்து அசத்திவிட்டார்.வாணி ராணி,கல்யாண பரிசு உள்ளிட்ட சூப்பர்ஹிட் தொடர்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக தொடங்கினார்.விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபல தொடர்களில் ஒன்று ராஜா ராணி.

இதன் முதல் சீசனில் முக்கிய வில்லியாக நடித்து தமிழ் ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்து விட்டார் ஸ்ரீதேவி.இந்த தொடரில் கிடைத்த வரவேற்பை அடுத்து தனக்கென்று தனியொரு ரசிகர் பட்டாளத்தை பெற்றார் ஸ்ரீதேவி.2019 ஏப்ரல் மாதம் பிரபல போட்டோக்ராபர் அசோக் என்பவரை ஸ்ரீதேவி மனம் முடித்தார்.

சீரியல்களுக்கு வரும் முன் தனுஷின் புதுக்கோட்டையில் இருந்து சரவணன்,தேவதையை கண்டேன்,கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட படங்களில் துணை நடிகையாக நடித்திருந்தார்.தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் காற்றுக்கென்ன வேலி தொடரிலும்,சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பூவே உனக்காக தொடர்களிலும் முக்கிய வேடங்களில் நடித்து வருகிறார்.

இவர் கர்பமாக இருப்பதை சில மாதங்களுக்கு முன் ரசிகர்களிடம் அறிவித்தார்.இவருக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.இன்னும் சில வாரங்களில் குழந்தை பிறக்கவுள்ள நிலையில் இவரது குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய நண்பர்கள் இணைந்து இவருக்கு சர்ப்ரைஸாக வளைகாப்பு நிகழ்ச்சியை சிம்பிள் ஆக வீட்டிலேயே செய்துள்ளனர்.இதுகுறித்த புகைப்படங்கள் சிலவற்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ஸ்ரீதேவி.

View this post on Instagram

A post shared by 𝑺𝒓𝒊𝒅𝒆𝒗𝒊 𝑨𝒔𝒉𝒐𝒌 (@srideviashok_official)