தங்களது வித்தியாசமான தொடர்கள் மூலமாகவும்,நிகழ்ச்சிகள் மூலமாகவும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றாக இருந்து வருவது விஜய் டிவி.இந்த தொலைக்காட்சியின் மிக பெரிய ஹிட் நிகழ்ச்சிகளில் ஒன்றாக மாறியுள்ளது.

100 நாட்கள் ஓடும் இந்த நிகழ்ச்சி ரசிகர்களுக்கு தினமும் பெரிய எண்டெர்டைன்மெண்ட்டாக அமையும்.இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் நிலையில் ஏற்கனவே அந்த நேரத்தில் ஒளிபரப்பாகும் சில நிகழ்ச்சிகள் அல்லது சீரியல்கள் நிறுத்தப்படும் அல்லது நேரம் மாற்றப்படும்.

இந்த வருடத்திற்கான பிக்பாஸ் சீசன் 6 அக்டோபர் 9ஆம் தேதி பிரம்மாண்டமாக தொடங்க உள்ளது.இதனை அடுத்து தினமும் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகவுள்ளது.இந்த நிகழ்ச்சிக்காக சில சீரியல்கள் நேரம் மாற்றப்பட்டுள்ளன சில சீரியல்கள் சட்டென்று முடிக்கப்பட்டுள்ளன.

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாரதிதாசன் காலனி,பாவம் கணேசன்,சிப்பிக்குள் முத்து ஆகிய மூன்று சீரியல்கள் இன்றுடன் நிறைவடைந்துள்ளன.பிக்பாஸ் தொடங்குவதால் இந்த சீரியல்கள் திடீரென முடிக்கப்பட்டுள்ளன.இந்த சீரியல்களின் திடீர் நிறுத்தம் ரசிகர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.