தளபதி விஜய் நடிப்பில் 2016 சம்மருக்கு வெளியாகி சக்கைபோடு போட்ட திரைப்படம் தெறி.அட்லீ இந்த படத்தை இயக்கியிருந்தார்.ஜீ.வி.பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.வி க்ரியேஷன்ஸ் இந்த படத்தை தயாரித்திருந்தனர்.

Vijay Theri Album 300 Million Views in Youtube GV Prakash Atlee

சமந்தா,ஏமி ஜாக்சன்,இயக்குனர் மஹேந்திரன்,பிரபு,ராதிகா,நைனிகா,மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்திருந்தனர்.இந்த படம் ரசிகர்களிடமும்,விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Vijay Theri Album 300 Million Views in Youtube GV Prakash Atlee

வசூல் ரீதியாகவும் இந்த படம் பெரிய வெற்றியை பெற்று தந்தது.ஜீ.வி.யின் 50வது படமான இந்த படத்தின் பாடல்கள் சூப்பர்ஹிட் அடித்திருந்தன.இந்த படத்தின் ஆல்பம் யூடியூபில் 300 மில்லியன் பார்வையாளர்களை பெற்று சாதனை படைத்துள்ளது.இது விஜய் அட்லீ கூட்டணியில் வரும் 3ஆவது 300 மில்லியன் ஆல்பம் ஆகும்.விஜய்க்கு இது 4ஆவது ஆல்பம் என்பது குறிப்பிடத்தக்கது.